கடவுள் நம்பிக்கை உலகம் முலுவதும் கோடிக் கணக்கான மனிதர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று. தங்களுக்கு நேரும் எல்லா நன்மைகளுக்கும் தீமைகளுக்கும் காரணம் கடவுள்தான் என பலரும் நம்புகிறார்கள். இந்த நம்பிக்கையை வியாபாரமாக்கி காசு பார்க்கும் கூட்டமும் உலகம் முழுவதும் பரந்து விரிந்து கிடக்கிறது.
இந்து, கிறித்துவம், இஸ்லாம் என பாகுபாடு இல்லாமல் எல்ல மதங்களிலும் இது போன்ற கும்பல் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் கொஞ்ச காலத்திலேயே அவர்கள் பாடமும் கற்றுக் கொண்டுவிடுவார்கள். அப்படி ஆப்பரிக்க நாடான கென்யாவில் தன்னை வாழும் ஏசு கூறிக்கொண்டு இருந்த நபர் இப்போது தன் உயிரைக் காப்பாற்றுமாறு காவல்துறையிடம் தஞ்சம் அடைந்துள்ளார்.
கென்யாவின் புங்காமோ மாகாணத்தில் டோங்கரேன் பகுதியைச் சேர்ந்தவர் எலியுட் சிமியு. இவர் தன்னைத் தானே வாழும் ஏசு எனக் கூறி வந்துள்ளார். 20 வயதில் இவருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. அவருக்கு 8 குழந்தைகள். கடந்த 2009ஆம் ஆண்டு குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக நடந்த சண்டையில் சிமியுவின் தலையில் கொஞ்சம் பலமான காயம் ஏற்பட்டுள்ளது. இதற்காக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமாகியுள்ளார்.
அதன் பிறகு தன்னை வாழும் ஏசு எனக் கூறிக்கொண்டு சிமியு மதப்பிரச்சாரமும் செய்து வருகிறார். தனது பெயரையும் டோங்கரேன் வா யேசு என மாற்றிக் கொண்டார். அவரை நம்பி ஒரு கூட்டமும் இருக்கிறதாம். வாழும் ஏசுவாகிய தனது கணவர் தண்ணீரை தேனீராக மாற்றியதாகவும், அதைக் கிராம மக்கள் அனைவரும் குடித்தனர் என்றும் வாழும் ஏசுவின் அற்புதத்திற்கு சாட்சி கூறியிருக்கியார் சிமியுவின் மனைவி.
இதனால் ஆத்திரமடைந்த ஒருவர் உண்மையில் வாழும் ஏசு என்றால் சிலுவையில் மறித்து மூன்றாம் நாள் உயிருடன் வந்து நிரூபியுங்கள் என சமூக ஊடகத்தில் சவால் விட்டுள்ளார். வந்தது விணை. கிறிஸ்தவர்களின் பெரிய நம்பிக்கையே பரலோக வாழ்வுதான். அதற்காக ஏசு கிறிஸ்து பல்வேறு பாடுகள் பட்டு, சிலுவையில் கொடூரமாக அறையப்பட்டு, உயிரை விட்டு கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டு மூன்றாம் நாள் உயிருடன் எழுந்து வந்து, பிரலோகம் சென்றதாகத் தான் பைபிள் கூறுகிறது. உயிர்த்துழுந்த பிறகு மறுவாழ்வு உண்டு என்பது கிறிஸ்தவ மதத்தின் அடிப்படை நம்பிக்கை. ஏசு பாடுபட்டு, சிலுவையில் மறித்து, உயிரைவிடும் சம்பவங்களை துயரத்தோடும், நம்பிக்கையோடும் கிறிஸ்தவர்கள் கடைப்பிடிக்கும் காலம் தான் தவக்காலம். தவக்காலத்தை உலகம் முழுவதும் பல கோடி கிறிஸ்தவர்கள் மிகவும் பக்தியுடன் கடைப்பிப்பது வழக்கம். அந்த தவக்காலம் தற்போது தொடங்கியுள்ளது. இந்நிலையில் வாழும் இயேசு மீதான சவால் சமூகவலைதளத்தில் வைரலாக பரவியுள்ளது.
இயேசுவோடு சிலுவையில் அறையப்பட வேண்டிய இரண்டு திருடர்களை கண்டுபிடித்துவிட்டீர்களா என ஒருவர் பதில் கேள்வி கேட்டு டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். இயேசுவின் கடவுள் தன்மை எப்படி பரிசோதிக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டதோ, அதே போல் வாழும் இயேசுவின் புனிதத்தையும் நாம் நிரூபிக்க வேண்டும் என மற்றொருவர் பதிவிட்டிருக்கிறார். இப்படி சமூகவலைதளத்தில் இயேசு வா டோங்கரேன்-ஐ சிலுவையில் அறைந்து அவரின் புனிதத்தை உறுதி செய்வது தொடர்பாக படுதீவிரமாக விவாதிக்க தொடங்கியதும் கதிகலங்கிப் போனார் சிமியு.
சிமியுவோ, தன்னை சிலுவையில் அறையக் கூடாது. அப்படி செய்தால் அது உலகிற்குத்தான் பிரச்சனை. மக்களுக்குத்தான் பிரச்சனை, மக்களை காக்க யாரும் இருக்க மாட்டார்கள் என்று வாதம் வைத்து உள்ளார். ஆனால் மக்கள் செவிசாய்த்தார்களா என்பது தான் தெரியவில்லை.
இதையடுத்து எதற்கு வம்பு என காவல்துறையிடம் தஞ்சமடைந்துள்ளார் வாழும் இயேசு. மக்கள் தன்னை சிலுவையில் அறைந்து கொல்ல துடிக்கிறார்கள் என்றும், எனவே தன் உயிரை பாதுகாக்க வேண்டும் என்றும் சிமியு காவல்துறையிடம் முறையிட்டிருக்கிறார். என்ன செய்வதென்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறது காவல்துறை. அடுத்து என்ன நடக்கும் என ஆவலோடு காத்திருக்கிறார்கள் கென்ய மக்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Jesus Christ