கரன்சி நோட்டுகளை ஒருவர் அள்ளி வீசினால் அதை ஓடிச்சென்று நம்மவர்கள் மட்டும்தான் எடுப்பார்களா என்ன?
உலகின் காஸ்ட்லியான நகரங்களில் ஒன்றான நியூயார்க்கில் திடீரென ஒருவர் ரூபாய் நோட்டுகளை அள்ளி வீசியபோது பண ஆசைக்கு தாங்களும் விதிவிலக்கல்ல என கூறும் வகையில் அந்த நகரவாசிகள் போட்டி போட்டு கொண்டு பணத்தை எடுத்த காட்சி வெளியாகி வைரலாகியுள்ளது.
டுவிட்டரில் அது பற்றிய பதிவை வெளியிட்டிருந்த சிலர், இந்தியாவில் பா.ஜ.க வெற்றி பெற்றதால் இந்திய கோடீஸ்வரர் ஒருவர் பணத்தை வாரி இறைத்ததாக கூறியிருந்தனர்.
Happened today on 47 street ( Diamond Market) New York $100,000 given away.👇🏼👇🏼in ref to modi victory .. see how this millionaire Indian doing .. pic.twitter.com/HChNPayZ2d
உண்மையை ஆராய்ந்தபோது, 'தி காட் ஜோகுஷ்' என்ற பாப் பாடகர்தான் அவ்வாறு பணத்தை வாரி இறைத்ததும், அது தொடர்பான வீடியோவை டுவிட்டர் பக்கத்தில் இந்திய தேர்தல் முடிவு வெளியாவதற்கு முன்பே அவர் பதிவிட்டிருந்ததும் தெரியவந்தது.
மேலும் பார்க்க:
Published by:Tamilarasu J
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.