FACT CHECK: இறுதிச்சடங்கு கூடத்தின் ஊழியர் தூங்கும் போது தவறுதலாக தகனம் செய்யப்பட்டாரா?

FACT CHECK: இறுதிச்சடங்கு கூடத்தின் ஊழியர் தூங்கும் போது தவறுதலாக தகனம் செய்யப்பட்டாரா?

கோப்புப்படம்

"செய்தி இணையதளத்தின் அடிப்பக்கத்தில் “This is satire" என்று குறிப்பிடப்பட்டுள்ளது"

  • Share this:
    அமெரிக்காவில் இறுதி சடங்கு கூடத்தில் அசந்து தூங்கியவரை இறந்தவர் என்று தவறாக நினைத்து தகனம் செய்ததாக பரவிய செய்தியின் உண்மைத்தன்மையை பார்க்கலாம்.

    கொரோனா வைரஸால் அமெரிக்காவில் உயிரிழப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அமெரிக்காவில் இதுவரை 22 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். நியூயார்க் மாகாணம்தான் அதிகப்படியான பாதிப்பை எதிர்கொண்டுள்ளது.

    நியூயார்க்கில் கொரோனா வைரஸால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் இறுதி சடங்கு கூடத்தில் சடலங்கள் குவிந்து வருகிறது.

    இந்த நிலையில், இங்கு பணியாற்றும் ஒருவர் அசதியால் தூங்கும் போது தெரியாமல் தகனம் செய்யப்பட்டதாக வீக்லி இன்குயர் என்ற இணையதளம் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது.



    ஆனால், இந்த செய்தி இணையதளத்தின் அடிப்பக்கத்தில் “This is satire" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது இந்த செய்தி உண்மையானது இல்லை என்றும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.



    எனினும், பலர் இந்த செய்தியை உண்மை என நம்பி பகிர்ந்து வருகின்றனர். இப்படி ஒரு சம்பவம் நடக்கவே இல்லை என்பதே உண்மையான செய்தியாகும்.

     

     













    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


    Published by:Vijay R
    First published: