பூவுலகின் மகா போராட்டம்: போராட்ட விவசாயிகளின் பாதுகாப்பு குறித்து பிரிட்டன் நாடாளுமன்றத்தில் விவாதம் கோரும் எம்.பி.

பூவுலகின் மகா போராட்டம்: போராட்ட விவசாயிகளின் பாதுகாப்பு குறித்து பிரிட்டன் நாடாளுமன்றத்தில் விவாதம் கோரும் எம்.பி.

பிரிட்டன் தொழிலாளர் கட்சி எம்.பி.

பூமியின் மகாப் போராட்டமான விவசாயிகள் போராட்டம் குறித்தும் விவசாயிகள் பாதுகாப்பு குறித்தும் பார்லிமெண்டில் விவாதம் தேவை’ என்று தன் சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 • Share this:
  பிரிட்டிஷ் தொழிலாளர் கட்சியின் எம்.பி.யான தன்மஞ்சீத் சிங் தேசி, இந்திய விவசாயப் போராட்டம் பூவுலகிலேயே மிகப்பெரிய போராட்டம் என்றும் போராடும் விவசாயிகளுக்கான பாதுகாப்பு குறித்து பிரிட்டன் பார்லிமெண்டில் விவாதிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.

  மத்திய அரசின் விவசாயச் சட்டங்களை ரத்து செய்யக்கோரி டெல்லியில் விவசாயிகள் போராட்டம் கடந்த நவம்பர் இறுதி முதல் நடைபெற்று வருகிறது, பேச்சுவார்த்தைகளில் எந்த வித முன்னேற்றமும் இல்லை.

  மாறாக விவசாயப்போராட்டங்களைப் பற்றிய அவதூறுப் பிரச்சாரங்களைத்தான் பாஜகவின் ஐடி பிரிவு கட்டவிழ்த்து விடுவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் சமூக ஆர்வலர்களும் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

  இந்நிலையில் பிரிட்டன் பாராளுமன்ற தொழிலாளர் கட்சி எம்.பி. தன்மஞ்சித் சிங் தேசி, ‘பிரிட்டன் தொகுதிகளிலிருந்து 1 லட்சத்துக்கும் மேலானோர், 100க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் பிரிட்டன் பிரதமருக்கு ஆன்லைன் கோரிக்கை மனு செய்துள்ளனர்.

  இந்தியாவில் பத்திரிகையாளர்கள், அதாவது நோதீப் கவுர் போன்ற பத்திரிகையாளர்கள் கைது செய்யப்படுகின்றனர். இந்நிலையில் பூமியின் மகாப் போராட்டமான விவசாயிகள் போராட்டம் குறித்தும் விவசாயிகள் பாதுகாப்பு குறித்தும் பார்லிமெண்டில் விவாதம் தேவை’ என்று தன் சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

  மேலும் பிரிட்டன் பார்லி.யில் பிசினஸ் ஹவர் கேள்வி நேரத்தின் போது, தேசி, “விவசாயிகளின் அமைதிப் போராட்டம் பல மாதங்களாக நடைபெற்று வருகிறது, பூவுலகின் மிகப்பெரிய போராட்டம். இது பெரும் கவலையளிக்கக் கூடியதாக உள்ளது, விவசாயிகளின் பாதுகாப்பு குறித்து நாம் விவாதம் வைக்க வேண்டும், என்றார்.

  மேலும் பத்திரிகையாளர்கள் கைது, அமைதியாக போராடுபவர்களைக் கைது செய்தல், நோதீப் கவுர் போன்ற மனித உரிமை செயற்பாட்டாளர்களைக் கைது செய்வது, அவர் மீது பாலியல் தாக்குதல் நடந்ததாகவும் செய்திகள் வருகின்றன. ஆகவே அவைத்தலைவர் விரைவில் இது தொடர்பாக விவாதம் ஒன்றை நடத்துவாரா” என்றார் தேசி.

  தொழிலாளர் கட்சி எம்.பி. தேசியின் இந்தக் கேள்விக்குப் பதில் அளித்த எம்.பி. ரீஸ் மாக், “அமைதியாக போராடுவதற்கான உரிமை அடிப்படையானது. இதனுடன் கருத்துச் சுதந்திரம், இண்டெர்நெட் சுதந்திரமும் தேவை. இந்தியா ஒரு பெருமைக்குரிய ஜனநாயக நாடு, நாம் இந்தியாவுடன் வலுவான உறவு வைத்துள்ளோம். அடுத்த நூற்றாண்டில் இந்தியாவுடனான நம் உறவு உலகின் முக்கியத்துவம் வாய்ந்த உறவாக இருக்கும். யுகே அரசு தொடர்ந்து விவசாயிகள் போராட்டத்தை கண்காணிக்கும் பின் தொடரும்.

  வேளாண் சீர்த்திருத்தம் இந்தியாவின் உள்நாட்டுக் கொள்கை. நாம் மனித உரிமைகள் பிரச்சினைகளையும் தொடர்ந்து கவனத்தில் கொள்வோம்” என்றார்.
  Published by:Muthukumar
  First published: