5 கோடி கணக்குகளின் தகவல்கள் திருடப்பட்டதை ஒப்புக்கொண்ட ஃபேஸ்புக்!

பேஸ்புக் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூகர்பெர்க்

 • News18
 • Last Updated :
 • Share this:
  5 கோடி ஃபேஸ்புக் கணக்குகளின் தகவல்கள்  ஹேக்கர்களால் திருடப்பட்டிருக்கக்கூடும் என்ற அதிர்ச்சிகரமான தகவலை ஃபேஸ்புக் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

  உலகில் 223 கோடி பேரால் பயன்படுத்தப்படுகிறது ஃபேஸ்புக் சமூக வலைதளம். இதில் பதியப்படும் பதிவுகள் சமூகத்தில் பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. சமூக வலைத்தளங்களில் மிக முக்கியமானதாக கருதப்படும் ஃபேஸ்புக் நிறுவனம், அதைப் பயன்படுத்துபவர்களின் கணக்குகள் செயல்படும் முறையில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக கண்டுபிடித்துள்ளது. இந்த பாதுகாப்பு குறைபாட்டினால் சுமார் 5 கோடி பேரின் கணக்குகளின் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாகவும், 5 கோடி பேரின் கணக்குகள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாகவும் கூறியுள்ளது.

  கோப்புப் படம்


  அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், கடந்த செப்டம்பர் 16-ம் தேதியில் இருந்து, ஃபேஸ்புக் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை திடீரென அதிகரித்ததை பொறியாளர்கள் ஆராய்ந்தனர். அப்போது பேஸ்புக்கின் பயனாளர்கள் தகவல்கள் திருடப்பட்டிருக்கலாம் என தெரியவந்ததாக ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

  இதில் பாதிக்கப்பட்டவர்களின் கணக்குகளை எளிதாக அறிந்து கொள்ளலாம். இதுகுறித்து ஃபேஸ்புக் நிறுவனம் கூறுகையில், ஹேக் செய்யப்பட்ட கணக்குகள் தானாக லாக்வுட் (logout) ஆகியிருக்கும் என்றும் மீண்டும் அவர்கள் லாக்இன்(login) செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளது.
  Published by:Vaijayanthi S
  First published: