முகப்பு /செய்தி /உலகம் / தாலிபான்களின் பேஸ்புக் பக்கங்கள் முடக்கம்.. கருத்து சுதந்திரம் இல்லை என தாலிபான் புகார்

தாலிபான்களின் பேஸ்புக் பக்கங்கள் முடக்கம்.. கருத்து சுதந்திரம் இல்லை என தாலிபான் புகார்

தாலிபான்களின் பேஸ்புக் பக்கங்களுக்கு தடை

தாலிபான்களின் பேஸ்புக் பக்கங்களுக்கு தடை

அமெரிக்க சட்ட விதிகளை காரணம் காட்டி தாலிபான்களின் கணக்குகளை பேஸ்புக் நீக்கியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜனநாயக ஆட்சி கவிழ்க்கப்பட்டு, தாலிபான்களின் ஆட்சி நிறுவப்பட்டது. அங்கிருந்த அமெரிக்க படைகளை முற்றாக திரும்பப் பெறுவதாக அந்நாட்டின் அதிபர் ஜோ பைடன் முடிவெடுத்ததன் விளைவாக தாலிபான்கள் மீண்டும் ஆட்சியை கைப்பற்றினர். புதிய தாலிபான் ஆட்சியில் பல்வேறு அமைச்சகங்கள் அமைக்கப்பட்டு அரசு ஊடகங்களும் செயல்பட்டு வருகின்றன.இந்நிலையில், தாலிபான் அரசு இரண்டு செய்தி நிறுவனங்களின் பக்கங்களை பேஸ்புக் நிறுவனம் தனது தளத்தில் இருந்து நீக்கியுள்ளது. அமெரிக்காவின் சட்ட விதிகளின் படி தாலிபான் ஒரு பயங்கரவாத அமைப்பு என்பதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பேஸ்புக் நிறுவன செய்தித் தொடர்பாளர் கூறியதாவது, தாலிபான் அமெரிக்க சட்டத்தின் படி ஒரு பயங்கரவாத அமைப்பாக நிறுவப்பட்டுள்ளது. எனவே,அவர்கள் எங்கள் சேவையை பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது. எனவே, தாலிபான் அமைப்பால் நேரடியாகவோ மறைமுகமாகவோ நடத்தப்படும் கணக்குகளும் அதை ஆதரித்து பிரதிநிதித்துவம் செய்யும் கணக்குகளும் முடக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.

பேஸ்புக்கின் இந்த நடவடிக்கையை தாலிபான் அரசின் செய்தித் தொடர்பாளர் கடுமையாக விமர்சித்துள்ளார். அமெரிக்க நிறுவனத்தின் பொறுமையின்மை, சகிப்புத்தன்மை இன்மையை இது காட்டுகிறது.கருத்து சுதந்திரம் என்ற முழக்கத்தை வைத்து மற்ற நாடுகளை இவர்கள் ஏமாற்றி வருகின்றனர் என செய்தித் தொடர்பாளர் சபியுல்லா முஜாஹித் விமர்சித்துள்ளார்.

இதையும் படிங்க: பாகிஸ்தானில் அமெரிக்க டிக்டாக் பிரபலத்துக்கு கூட்டுபாலியல் வன்கொடுமை - சுற்றுலாவுக்கு வந்த இடத்தில் நேர்ந்த கொடூரம்

பேஸ்புக் போலவே தாலிபான் அமைப்புகளின் இன்ஸ்டாகிரம் பக்கங்களும் முடக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ட்விட்டர் தளத்திலும் தாலிபான் பக்கங்களை தடை செய்யக் கோரி ஹெஷ்டேக்குகள் ட்ரென்டான வண்ணம் உள்ளன. தாலிபான் அமைப்பின் பக்கங்களுக்கு ட்விட்டர் நிறுவனம் இன்னும் புளு டிக் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Facebook, Taliban