இனி பேஸ்புக் ஊழியர்களில் பெரும்பாலானோர் நிரந்தரமாக வீட்டிலேயே பணியாற்றுவர்: மார்க் ஜுக்கர்பெர்க்..!
அவரவர் இடங்களுக்கு ஏற்றவாறு சம்பளம் மாறுபடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வெறுப்பு பேச்சுகளை அகற்றுவதில் எப்போதும் வெளிப்படை தன்மையுடன் நடந்து கொள்வதாக பேஸ்புக் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
- News18 Tamil
- Last Updated: May 23, 2020, 3:52 PM IST
பேஸ்புக் நிறுவன ஊழியர்கள் பெரும்பாலானோர் நிரந்ததரமாக வீட்டில் இருந்தே பணியாற்றுவர்கள் என அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.
Also see...
கொரோனா வைரஸ் பாதிப்பால் பெரும்பாலான நாடுகள் தேசிய அளவில் ஊரடங்கை அமல்படுத்தி வருகின்றன.
இதனால் பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே பணிபுரிய அனுமதித்துள்ளன.
ஊரடங்கு முடியும் வரை வீட்டிலிருந்தே பணிபுரியும் நடைமுறை கடப்ப்பிடிக்கப்படும். இந்நிலையில் உலகின் மிகப் பெரிய சமூக வலைதளமான பேஸ்புக் நிறுவனத்தின் ஊழியர்களும் கடந்த 2 மாதங்களாக அலுவலகத்திற்கு வராமல் வீட்டிலிருந்தே பணிபுரிகின்றனர்.
கொரோனா தொற்றால் ஊழியர்கள் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காக இனி பெரும்பாலான ஊழியர்கள் நிரந்ததரமாக வீட்டில் இருந்தே பணியாற்றுவார்கள் என மார்க் ஜுக்கர் பெர்க் தெரிவித்துள்ளார்.
மேலும் அவரவர் இடங்களுக்கு ஏற்றவாறு சம்பளம் மாறுபடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதன்படி 48 ஆயித்துக்கும் அதிகமான அந்நிறுவன ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Also see...