ஃபேஸ்புக் நிறுவன சிஇஓ பதவியிலிருந்து மார்க் ஜூகர்பர்க் விலக வலியுறுத்தல்
ஃபேஸ்புக் நிறுவன சிஇஓ பதவியிலிருந்து மார்க் ஜூகர்பர்க் விலக வலியுறுத்தல்
மார்க் ஜூகர்பர்க்
ஃபேஸ்புக் நிறுவனம், அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் இயங்கும் மக்கள் தொடர்புத் துறை நிறுவனத்தை பணிக்கு அமர்த்தி அதன்மூலம் தங்கள் நிறுவனத்தின் எதிரிகள் மற்றும் விமர்சகர்கள் மீது அவதூறுகளை பரப்பியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
பிரபல சமூக வலைதளமான ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூகர்பர்க் பதவி விலக வேண்டும் என அந்த நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள சில நிறுவனங்கள் வலியுறுத்தியுள்ளன.
ஃபேஸ்புக் நிறுவனம், அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் இயங்கும் மக்கள் தொடர்புத் துறை நிறுவனத்தை பணிக்கு அமர்த்தி, அதன்மூலம் தங்கள் நிறுவனத்தின் எதிரிகள் மற்றும் விமர்சகர்கள் மீது அவதூறுகளை பரப்பியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
’நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகையில் இதுகுறித்த புலனாய்வு செய்தி வெளியானது. இதனால், அமெரிக்காவில் பரபரப்பு நிலவியது. இந்நிலையில், சிஇஓ பதவியிலிருந்து மார்க் ஜூகர்பர்க் விலக வேண்டும் என ஃபேஸ்புக் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள சில நிறுவனங்கள் வலியுறுத்தியுள்ளன.
ஃபேஸ்புக் நிறுவன முதலீட்டாளர்களுள் ஒருவரும், டிரிலியம் அசெட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் துணைத் தலைவருமான ஜோனஸ் குரோன் வெளியிட்டுள்ள அறிக்கையில், செடியின் மீது படர்ந்துள்ள பனித்துளி போன்று ஃபேஸ்புக் நிறுவனத்தின் செயல்பாடுகள் இருக்கின்றன என்றும், மார்க் ஜூகர்பர்க் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
ஃபேஸ்புக் நிறுவனத்தின் மற்றொரு முதலீட்டாளரான நடாஷா லாம்ப் கூறுகையில், நிறுவன ரீதியாக இதுபோன்ற சவால்களை எதிர்கொண்டால் பிரச்னை எழுந்திருக்காது என்று குறிப்பிட்டார்.
ஜூகர்பர்க் மறுப்பு: தன் மீதான குற்றச்சாட்டுகளை ஜூகர்பர்க் மறுத்துள்ளார். குறிப்பிட்ட மக்கள் தொடர்பு நிறுவனம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும், எதிர்காலத்தில் அந்நிறுவனத்துடன் எவ்வித செயல்பாடுகளையும் மேற்கொள்ளக் கூடாது என்றும் தனது குழுவிடம் தெரிவித்துள்ளதாகவும் மார்க் ஜூகர்பர்க் கூறியுள்ளார்.
Also watch
Published by:DS Gopinath
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.