Home /News /international /

ரஷ்ய அரசு ஊடகங்களுக்கு தடை விதித்தது ஃபேஸ்புக்... உக்ரைனின் எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவு

ரஷ்ய அரசு ஊடகங்களுக்கு தடை விதித்தது ஃபேஸ்புக்... உக்ரைனின் எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவு

உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கப்படும் என்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் கூறியிருந்த நிலையில், அவை உக்ரைனுக்குள் வந்து விட்டதா என்பது குறித்த எந்த தகவலும் இல்லை.

உலகின் முன்னணி சமூக வலைதளங்களில் ஒன்றான ஃபேஸ்புக், ரஷ்ய அரசு ஊடகங்களுக்கு தடை விதித்துள்ளது. உக்ரைன் நாட்டின் எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஃபேஸ்புக் இத்தகைய நிலைப்பாட்டை எடுத்துள்ளது.

இதன் அடிப்படையில், ரஷ்யாவின் அரசு ஊடகங்கள் ஃபேஸ்புக்கில் எந்தவொரு தகவல் அல்லது விளம்பரங்களை பதிவிட முடியாது. இதேபோன்று விளம்பரங்களால் கிடைக்கும் வருமானமும் நிறுத்தப்படும்.

தங்களைப் போன்று மற்ற சமூக வலைதளங்களும் ரஷ்ய அரசு ஊடகங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஃபேஸ்புக்கின் மூத்த அதிகாரி நாதனியல் கிளேஷியர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க - உக்ரைன் ராணுவத்தை துவம்சம் செய்யத் தொடங்கிய ரஷ்யா... நவீன ஏவுகனைகள் மூலம் அதிரடி தாக்குதல்

சிறிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்திருப்பதற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. வல்லரசு நாடு தங்கள் மீது போர் நடத்தி வரும் நிலையில், சரண் அடையாமல் உக்ரைன் மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

இந்நிலையில், ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானம் ஐநாவின் பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டு வரப்பட்டது. இதனை ரஷ்யா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்டுத்தி ரத்து செய்து விட்டது.

இதையும் படிங்க - உக்ரைன் மீது உக்கிர போர்: ரஷ்யாவுக்கு கண்டனம் தெரிவித்து பல்வேறு நாடுகளில் போராட்டம்!

ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானத்திற்கு அமெரிக்கா உள்பட 15 நாடுகள் ஆதரவு தெரிவித்தன. இந்தியா, சீனா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

உக்ரைன் - ரஷ்யா மோதல் விவகாரத்தில் இந்தியா எந்தப் பக்கமும் ஆதரவு அளிக்காமல் இருந்து வருகிறது. முன்களத்தில் நின்று அதிபர் செலன்ஸ்கி போராடி வருவதால், உக்ரைன் ராணுவ வீரர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். உக்ரைனுக்கு எதிரான போரை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ள நிலையில், வல்லரசு நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் போன்றவை உக்ரைனுக்கு சொல்லிக் கொள்ளும்படியான பெரிய உதவிகள் எதையும் செய்யவில்லை.

உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கப்படும் என்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் கூறியிருந்த நிலையில், அவை உக்ரைனுக்குள் வந்து விட்டதா என்பது குறித்த எந்த தகவலும் இல்லை.

ஆனால் மறு முனையில் ரஷ்யா நவீன ரக ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக ரஷ்ய ராணுவத்தினர், உக்ரைன் ராணுவத்தை குறிவைத்து தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இன்னொரு பக்கம் உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைகளும் விரைவுபடுத்தப்பட்டுள்ளது.
Published by:Musthak
First published:

Tags: Russia - Ukraine

அடுத்த செய்தி