ஹோம் /நியூஸ் /உலகம் /

ஃபேஸ்புக் விளம்பரங்களால் தேர்தலில் வெற்றி பெற்ற ட்ரம்ப்: ஆய்வில் தகவல்

ஃபேஸ்புக் விளம்பரங்களால் தேர்தலில் வெற்றி பெற்ற ட்ரம்ப்: ஆய்வில் தகவல்

ட்ரம்பின் வெற்றிக்கு உதவிய ஃபேஸ்புக்

ட்ரம்பின் வெற்றிக்கு உதவிய ஃபேஸ்புக்

ஃபேஸ்புக் விளம்பரங்களுக்காக ட்ரம்ப் ஆதரவாளர்கள் சுமார் 4.4 கோடி டாலரை செலவிட்டு குடியரசுக் கட்சிக்கு ஆதரவு திரட்டினர். இது  ஹிலாரி கிளிண்டன் தரப்பினர் செலவிட்ட 2.8 கோடி டாலரை விட அதிகமாகும்.

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  பிரபல சமூக வலைதளமான ஃபேஸ்புக் மூலமான விளம்பரங்களால் அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

  அமெரிக்காவில் கடந்த 2016-இல் நடைபெற்ற அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்புக்கும், ஹிலாரி கிளிண்டனுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இத்தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெற்றார். அவர் வெற்றி பெற்றதன் பின்னணி குறித்து ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட்டில் உள்ள சார்லஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்கள் ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர்.

  அந்த ஆய்வில், அமெரிக்காவில் கடந்த 2016-ல் நடைபெற்ற அதிபர் தேர்தலில், வாக்காளர்கள் யாருக்கு ஆதரவளிப்பார்கள் என்று உறுதியாகக் கூற முடியாத நிலைமை இருந்தது. குறிப்பாக, குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

  இவர்கள் இருவரும் வெற்றி பெறும் நோக்கில் தீவிரமாக பிரச்சாரம் செய்தனர். ஃபேஸ்புக் விளம்பரங்களுக்காக ட்ரம்ப் ஆதரவாளர்கள் சுமார் 4.4 கோடி டாலரை செலவிட்டு குடியரசுக் கட்சிக்கு ஆதரவு திரட்டினர். இது  ஹிலாரி கிளிண்டன் தரப்பினர் செலவிட்ட 2.8 கோடி டாலரை விட அதிகம்.

  வாக்காளர்களின் பாலினம், வசிப்பிடம், அரசியல் விருப்பம் ஆகியவற்றை அறிந்து அவர்களை ட்ரம்புக்கு ஆதரவாக திசை திருப்புவதற்காக ஃபேஸ்புக்  விளம்பரங்கள் மூலம் புதிய யுக்திகள் மேற்கொள்ளப்பட்டன என்று அந்த ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

  Also watch

  Published by:DS Gopinath
  First published:

  Tags: America election, Donald Trump, Facebook