3 வயதில் தொலைந்த மகனை ‘பேஸ் அப்’ தொழில்நுட்பம் மூலம் கண்டுபிடித்த பெற்றோர்கள்!

உண்மையான பெற்றோருடன் இணைந்த மகிழ்ச்சியில், தனக்கு இப்போது 2 பெற்றோர்கள் கிடைத்திருப்பது சந்தோஷமாக இருப்பதாக யு வீபெங் கூறியுள்ளார்.

news18
Updated: July 22, 2019, 1:05 PM IST
3 வயதில் தொலைந்த மகனை ‘பேஸ் அப்’ தொழில்நுட்பம் மூலம் கண்டுபிடித்த பெற்றோர்கள்!
யு வீபெங் தனது பெற்றோர் உடன்
news18
Updated: July 22, 2019, 1:05 PM IST
சமீபத்தில் இணைய உலகில் ஹிட் அடித்த பேஸ் அப் தொழில்நுட்பத்தை போன்ற செயற்கை நுண்ணறிவு செயல்பாட்டின் மூலம் காணாமல் போன மகனை, பெற்றோர் 18 ஆண்டுகளுக்குப் பின் கண்டுபிடித்துள்ளனர்.

ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு தொழில்நுட்பம் இணையத்தில் ஹிட் அடிப்பது வழக்கம். அப்படியாக சமீபத்தில் பேஸ் ஆப் என்ற தொழில்நுட்பம் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. உங்களுடைய தற்போதைய புகைப்படத்தை கொடுத்து, வயதானால் எப்படி இருப்பீர்கள்? சிறுவயதில் எப்படி இருந்தீர்கள்? பெண்ணாக இருந்தால் எப்படி இருப்பீர்கள்? என்பதை பார்ப்பதே இந்த தொழில்நுட்பம் ஆகும்.

தனிநபர்களின் புகைப்படங்களை இந்த ஆப் சேகரித்து வைக்கிறது என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. இந்நிலையில், இதே தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 18 ஆண்டுகளுக்கு முன் தொலைந்த மகனை, பெற்றோர் கண்டுபிடித்துள்ளனர்.

சீனாவின் குவாங்டாங் மாகாணம் ஷென்லேன் நகரை சேர்ந்த லீ என்பவரின் மகனான யு வீபெங், 2001-ம் ஆண்டு மே மாதம் 3 வயதாக இருக்கும் போது தொலைந்து போயுள்ளார். போலீசார் நடத்திய விசாரணையில் சிறுவன் கடத்தப்பட்டது தெரிய வந்தது. எனினும், கண்டுபிடிக்க முடியவில்லை.

18 ஆண்டுகளாக தீராத சோகத்தில் இருந்த பெற்றோர், தற்போது ட்ரெண்டிங்கில் உள்ள பேஸ் ஆப் தொழில்நுட்பம் மூலம் கண்டுபிடிக்க முடிவு செய்தனர். அதன்படி, சிறுவயதில் எடுக்கப்பட்ட மகனின் புகைப்படத்தை, தற்போதைய வயதுக்கு ஏற்றதுபோல மாற்றியுள்ளனர்.

இதனை அடுத்து, அந்த புகைப்படங்கள் மூலம் போலீசார் உதவியுடன் மகனை தேடி வந்துள்ளனர். இறுதியாக, அவர்களின் முயற்சிக்கு பலன் கிடைத்துள்ளது. கவுங்சோ மாகாணத்தில் படித்து வரும் மாணவரின் முகத்துடன், அந்த புகைப்படங்கள் ஒத்துப்போயுள்ளது.

போலீசார் அவரை அணுகி விவரத்தை எடுத்து கூறியபோது யு வீபெங் அதனை நம்பவில்லை. அதன் பிறகு அவருக்கு டி.என்.ஏ. பரிசோதனை செய்ததில் அவர்தான் காணாமல் போன யு வீபெங் என்பது உறுதி செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து, 18 ஆண்டுகளுக்கு பிறகு அவர் தனது குடும்பத்துடன் இணைந்தார்.

கட்டுமானப் பணி ஒன்றில் இருந்தபோது யு வீபெங்கை, லீ தொலைத்துள்ளார். ஆனால், யு வீபெங் கடத்தப்படவில்லை. அங்குள்ள நபர் ஒருவர் வீபெங்கை எடுத்து வளர்த்து தற்போது கல்லூரியிலும் சேர்த்துள்ளார்.

உண்மையான பெற்றோருடன் இணைந்த மகிழ்ச்சியில், தனக்கு இப்போது 2 பெற்றோர்கள் கிடைத்திருப்பது சந்தோஷமாக இருப்பதாக யு வீபெங் கூறியுள்ளார்.பிரபல கிரிக்கெட் வீரர்கள் வயதனால் எப்படி இருப்பார்கள்?

First published: July 22, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...