கோடிக்கணக்கான போலி கணக்குகளை முடக்கியது பேஸ்புக் நிர்வாகம்

news18
Updated: May 16, 2018, 3:31 PM IST
கோடிக்கணக்கான போலி கணக்குகளை முடக்கியது பேஸ்புக் நிர்வாகம்
ஃபேஸ்புக்
news18
Updated: May 16, 2018, 3:31 PM IST
பேஸ்புக் நிறுவனம் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 58 கோடி போலி முகநூல் கணக்குகளை நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் பரவலாக அனைவராலும் பயன்படுத்தப்படும் பேஸ்புக்கை உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில், முகநூலை பயன்படுத்தும் சுமார் 5 கோடி கணக்காளர்களின் விவரங்கள் ஒரு ‘ஆப்’ மூலம் திருடப்பட்டதாக புகார் எழுந்தன. மேலும் அவ்வாறு திருடப்பட்ட தகவல்கள் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா என்ற அரசியல் பிரசார நிறுவனத்திடம் விற்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, பேஸ்புக் வலைத்தளத்தில் வன்முறை நோக்கத்தை தூண்டும் படங்கள், ஆபாச படங்கள் மற்றும் பயங்கரவாத கருத்துகளை வெளியிடும் முகநூல் கணக்குகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவ்வாறு வெளியிடப்படும் கணக்குகள் முடக்கப்படும் என்றும் பேஸ்புக் நிறுவனம் அறிவித்திருந்தது.

இந்நிலையில், கடந்த 3 மாதங்களில் மட்டும் 58.3 கோடி போலி முகநூல் கணக்குகள் முடக்கப்பட்டது பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் ‘பேஸ்புக்’ கணக்காளர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் வகையில் அந்நிறுவனம் சுமார் 200 செயலிகளுக்கு தடை விதித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
First published: May 16, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்