ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள விமான நிலையம் அருகே குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானை தாலிபான் அமைப்பினர் கைப்பற்றியதை தொடர்ந்து அங்குள்ள வெளிநாட்டினரும் உள்நாட்டு மக்களும் வெளிநாடுகளுக்கு செல்ல முயற்சித்து வருகின்றனர். காபூல் விமான நிலையம் தற்போது வெளிநாட்டு ராணுவ வீரர்களின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், ஏராளமானோர் அங்கு தஞ்சமடைந்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்தியா உள்ளிட்ட நாடுகள் சிறப்பு விமானம் மூலம் காபூலில் உள்ளவர்களை மீட்டு வருகின்றன. காபூல் விமான நிலையத்துக்கு வெளியில் உள்ள பகுதிகள் முழுவதும் தாலிபான் கட்டுப்பாட்டில் உள்ளதால், விமான நிலையங்களுக்குள் பொதுமக்கள் நுழையாதபடி தாலிபான்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
காபூல் விமான நிலையம் அருகே தீவிரவாத தாக்குதல் குறித்த அச்சுறுத்தல் இருப்பதாக ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் மாரிஸ் பெய்ன் தெரிவித்தார். இதேபோன்ற தகவலை பிரிட்டனும் வெளியிட்டிருந்தது. ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தால் தாக்குதல் நடத்தப்படும் ஆபத்து அதிகரித்து வருவதால் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருக்கும் விமானப் போக்குவரத்து கூடிய விரைவில் முடித்துக் கொள்ளப்பட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் கூறியிருந்தார்.
இதையும் படிங்க: ஜெர்மனியில் பீசா டெலிவரி செய்யும் நபராக மாறிய ஆப்கான் அமைச்சர்!
இந்நிலையில், காபூல் விமான நிலையத்தின் வெளியில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை அமெரிக்காவும் உறுதிப்படுத்தியுள்ளது. அதேவேளையில், குண்டுவெடிப்பின் பாதிப்பு தொடர்பாக தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை. குறைந்தது 10 பேர் வரை இறந்திருக்கலாம் என்று உள்ளூர் ஊடகம் தெரிவித்துள்ளது. இந்த குண்டுவெடிப்பு சம்பவம் காரணமாக ஆப்கானிஸ்தானில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.