இலங்கையில் மீண்டும் தேவாலயம் அருகே குண்டுவெடிப்பு

குண்டு வெடிப்பு வெளிநாட்டு சதியுடன் உள்ளூர் இயக்கங்கள் மூலமாக நடத்தப்பட்டுள்ளதாக அதிபர் மாளிகை அறிவித்துள்ளது.

news18
Updated: April 22, 2019, 5:22 PM IST
இலங்கையில் மீண்டும் தேவாலயம் அருகே குண்டுவெடிப்பு
இலங்கையில் குண்டு வெடித்த பகுதி.
news18
Updated: April 22, 2019, 5:22 PM IST
இலங்கையில் நேற்று 8 இடங்களில் குண்டு வெடித்த நிலையில், இன்று கொச்சிக்கடை தேவாலயம் அருகே மீண்டும் ஒரு குண்டு வெடித்துள்ளது.

இலங்கையின் கொழும்பு மற்றும் மட்டக்களப்பு நகரில் உள்ள தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களில் நேற்று காலை தொடர்ந்து குண்டுகள் வெடித்தது.


Loading...

8 இடங்களில் நடந்த குண்டு வெடிப்பில் சுமார் 290 பேர் வரை உயிரிழந்துள்ளனர். ஈஸ்டர் தினத்தன்று நடந்த இந்த கோர சம்பவம் உலகையே உலுக்கியுள்ளது.

இந்த குண்டு வெடிப்பு வெளிநாட்டு சதியுடன் உள்ளூர் இயக்கங்கள் மூலமாக நடத்தப்பட்டுள்ளதாக அதிபர் மாளிகை அறிவித்துள்ளது.

இந்நிலையில், கொச்சிக்கடை கந்தானையில் உள்ள தேவாலயம் அருகே இன்று மாலை குண்டு வெடிப்பு நடந்துள்ளது.

வெடிகுண்டுகள் அடங்கிய வாகனத்தை கைப்பற்றிய போலீசார், குண்டுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டபோது இந்த சம்பவம் நடந்துள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.

இலங்கை குண்டு வெடிப்பு.. புகைப்படங்கள்...!

First published: April 22, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...