முகப்பு /செய்தி /உலகம் / வங்கதேசத்தில் பயங்கர வெடிவிபத்து... 14 பேர் பரிதாப பலி.. 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம்..!

வங்கதேசத்தில் பயங்கர வெடிவிபத்து... 14 பேர் பரிதாப பலி.. 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம்..!

வங்கதேசத்தில் வெடி விபத்து

வங்கதேசத்தில் வெடி விபத்து

வங்கதேசத்தில் டாக்காவில் உள்ள கட்டிடத்தில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 100 பேர் காயமடைந்த நிலையில் 14 பேர் பரிதாபமாகப் பலியாகியுள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • international, IndiaBangladesh Bangladesh

வங்கதேசத்தில் தலைநகர் டாக்காவில் குலிஸ்தான் பகுதியில் உள்ள 7 அடுக்கு கொண்ட வணிகக் கட்டடத்தில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 100-க்கும் மேற்பட்டோர்  படுகாயமடைந்துள்ளதாகவும், 14 பேர் பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாகக் கூட்டநெரிசலாக இருக்கும் சித்திக் பஜாரில் அமைந்துள்ள 7 அடுக்கு வணிக கட்டடத்தில் மாலை 4 மணியளவில் பயங்கர வெடிவிபத்து நிகழ்ந்துள்ளது. வெடிப்புக்கான காரணம் இதுவரை தெரியாத நிலையில் கீழ் மாடியில் அமைந்துள்ள சுகாதார பொருட்கள் விற்பனை செய்யும் கடையிலிருந்து தொடங்கி இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

Also Read : அழிவை நோக்கி ஜப்பான்... உடனே இதில் கவனம் செலுத்துங்கள்! - பிரதமரை அலெர்ட் செய்த ஆலோசகர்!

தொடர்ந்து தீயணைப்புப் படையினர் விரைந்து விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு டாக்கா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துள்ளனர். கட்டடத்தில் ஏற்பட்ட வெடிப்பு சுற்றுவட்டாரப்பகுதிகளிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

First published:

Tags: Bangladesh, Blast