நைஜீரியாவில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டதில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
நைஜீரியாவில் வறுமை, வேலையின்மை போன்ற காரணங்களால் சட்டவிரோதமாக பல்வேறு இடங்களில் எண்ணெய் சுரங்கங்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இங்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுவதில்லை. இந்நிலையில், சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.
Abaezi காட்டு பகுதியில் அமைந்துள்ள இந்த சட்டவிரோத எண்ணெய் சுத்திரிப்பு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் தீ ,எண்ணெய் கிடங்குகளில் வேகமாகப் பரவியது. சில நிமிடங்களிலேயே அவை வெடித்து சிதறின. இந்த விபத்தில் 100க்கும் மேற்பட்டோர் அடையாளம் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு உடல் கருகி உயிர் இழந்ததாக என காவல்துறை செய்தி தொடர்பாளர் மைக்கேல் அபாட்டம் தெரிவித்தார்.
தீ விபத்தில் பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தீ விபத்து ஏற்பட்ட சுத்திகரிப்பு நிலையத்தின் உரிமையாளரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த வெடிவிபத்தில் சட்டவிரோத எரிபொருளை வாங்க வரிசையில் நின்ற பல வாகனங்கள் எரிந்ததாக இளைஞர்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் தெரிவித்துள்ளது.தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.