ஹோம் /நியூஸ் /உலகம் /

காதைக்கிழித்த சத்தம்.. பரபரப்பான மார்க்கெட் பகுதியில் வெடித்த வெடிகுண்டு.. 6 பேர் பலி!

காதைக்கிழித்த சத்தம்.. பரபரப்பான மார்க்கெட் பகுதியில் வெடித்த வெடிகுண்டு.. 6 பேர் பலி!

இஸ்தான்புல் குண்டுவெளிப்பு

இஸ்தான்புல் குண்டுவெளிப்பு

மேலும் இந்த கொடூரமான தாக்குதலுக்குப் பின்னால் உள்ள குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க மாநிலத்தின் பிரிவுகள் செயல்பட்டு வருவதாகவும் துருக்கியின் துணை ஜனாதிபதி கூறினார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

ஞாயிற்றுக்கிழமை துருக்கி நாட்டில் உள்ள இஸ்தான்புல்லின் இஸ்திக்லாலின் பரபரப்பான ஷாப்பிங் தெருவில் ஏற்பட்ட வெடி விபத்தில் 6 பேர் இறந்தனர் மற்றும் 10க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்தனர் என அந்நாட்டு ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் கூறினார்.

இஸ்தான்புல்லின் இஸ்திக்லாலின் பரபரப்பான ஷாப்பிங் தெரு உள்ளூர் மற்றும் சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமானது. எப்போதும் மக்கள் கூட்டம் அலைமோதும் இந்த தெருவில் நேற்று மாலை சுமார் 4 மணிக்கு இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட படங்களின்படி, மாலை மக்கள் கூட்டம் அலைமோதிக்கொண்டிருந்த நேரம் நெருப்பு பிழம்புடன் காதைத் கிழிக்கும் சத்தத்துடன் ஒரு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. குண்டு வெடித்த வேகத்தில் சிலரது உடல் வீசி எறியப்பட்டுள்ளது.

உடனே அந்த இடத்தை விட்டு மக்கள் தங்கள் குழந்தைகளுடன் சிதறி ஓடத் தொடங்கினர். கரும்புகையோடு எழுந்த நெருப்பு சூழ்ந்த அந்த இடத்தில்  மீண்டும் குண்டு வெடிக்குமோ என்ற அச்சத்தில் சேதமடைந்த பகுதிக்கு செல்ல முடியாதவாறு பெரிய பாதுகாப்பு வளையத்தை போலீசார் அமைத்துள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்த இப்பகுதியை போலீசார் சுற்றி வளைத்தனர். மேலும் சைரன்கள் ஒலித்தபடி ஹெலிகாப்டர்கள் நகர மையத்தில் பறந்து கொண்டிருந்தன.

இது ஒரு தற்கொலைப்படை தாக்குதலாக இருக்கலாம் என்று துருக்கியின் துணை ஜனாதிபதி தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். மேலும் இந்த கொடூரமான தாக்குதலுக்குப் பின்னால் உள்ள குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க மாநிலத்தின் பிரிவுகள் செயல்பட்டு வருவதாகவும் கூறினார்.

வெடிவிபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் எந்த கருத்துக்களையும் இதுவரை தெரிவிக்கவில்லை. விபத்து நடந்த இடத்தில் சோதனைகளும் விசாரணைகளும் நடந்து வருகிறது.

இஸ்திக்லால் ஷாப்பிங் தெருவைக் குறிவைத்து 2015-2016ல் ஏற்கனவே ஒரு தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. இஸ்லாமிய அரசுக் குழு கூற்றுப்படி, அந்தத் தாக்குதல்களில் கிட்டத்தட்ட 500 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 2,000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

Published by:Ilakkiya GP
First published:

Tags: Bomb blast, Suicide, Turkey