Home /News /international /

உக்ரைன் தலைநகரை விட்டு இன்றைக்குள் இந்தியர்கள் வெளியேற திடீர் அறிவுறுத்தல்...

உக்ரைன் தலைநகரை விட்டு இன்றைக்குள் இந்தியர்கள் வெளியேற திடீர் அறிவுறுத்தல்...

Russia Ukraine War: ரயில்கள் தாமதம் ஆக வாய்ப்புள்ளது. அதிக கூட்டம் இருப்பின் ரத்து செய்யவும் நேரிடலாம். எனவே இந்தியர்கள் பொறுமை காக்க வேண்டும்.

Russia Ukraine War: ரயில்கள் தாமதம் ஆக வாய்ப்புள்ளது. அதிக கூட்டம் இருப்பின் ரத்து செய்யவும் நேரிடலாம். எனவே இந்தியர்கள் பொறுமை காக்க வேண்டும்.

Russia Ukraine War: ரயில்கள் தாமதம் ஆக வாய்ப்புள்ளது. அதிக கூட்டம் இருப்பின் ரத்து செய்யவும் நேரிடலாம். எனவே இந்தியர்கள் பொறுமை காக்க வேண்டும்.

உக்ரைன் மீது ரஷ்யா அதிரடி தாக்குதலை நடத்தி வரும் நிலையில், இன்றைக்குள் தலைநகர் கீவ்வை விட்டு வெளியே இந்திய தூதரகம் அறிவுறுத்தி உள்ளது. உக்ரைன் போரை இந்திய தூதரகம் தொடர்ந்து கண்காணித்து வரும் நிலையில் இன்று இந்த முக்கிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

இதுதொடர்பாக இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'மாணவர்கள் உள்பட அனைத்து இந்தியர்களும் உடனடியாக இன்று கீவ்வை விட்டு வெளியேற வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ரயில்கள் அல்லது வேறு எந்த போக்குவரத்தை பயன்படுத்தி இந்தியர்கள் கீவ்வை விட்டு வெளியேறி விட வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது.

நேற்று வெளியிடப்பட்ட மற்றொரு அறிவிப்பில், 'உக்ரைன் தலைநகர் கீவில் வார இறுதிநாள் ஊரடங்கு நீக்கப்பட்டுள்ளது. எனவே, மாணவர்கள் அனைவரும் ரயில் நிலையத்திற்கு சென்று அங்கிருந்து உக்ரைனின் மேற்கு பகுதிக்கு செல்லுமாறு கேட்டுக் கொள்கிறோம். உக்ரைனில் இருந்து வெளியேறுபவர்களுக்காக சிறப்பு ரயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இதையும் படிங்க - 'உக்ரைனைக் கைவிட மாட்டோம்' : ஐநா அவசர கூட்டத்தில் பொதுச் செயலாளர் பேச்சு
 அமைதியாகவும், ஒற்றுமையுடனும் இந்திய குடிமக்கள், மாணவர்கள் செல்ல வேண்டும். ரயில் நிலையத்தில் அதிக கூட்டம் கூடுவதற்கு வாய்ப்புள்ளது. எனவே, இந்தியர்கள் பொறுமையுடன் செயல்பட வேண்டும்.

 

ரயில்கள் தாமதம் ஆகவும் வாய்ப்புள்ளது. அதிக கூட்டம் இருப்பின் ரத்து செய்யவும் நேரிடலாம். எனவே இந்தியர்கள் பொறுமை காக்க வேண்டும். கையில் பாஸ்போர்ட், போதுமான பணம், சாப்பிடுவதற்கு உணவு, குளிரைத் தாங்கும் உடை மற்றும் அத்தியாவசிய தேவைக்குரிய பொருட்களை மட்டுமே கைவசம் வைத்திருக்க வேண்டும்.

இதையும் படிங்க - Russia-Ukraine War: உக்ரேனுக்குள் 40 மைல் தொலைவுக்கு அணிவகுத்து செல்லும் ரஷ்ய ராணுவம் - போரை தீவிரப்படுத்த திட்டம்
 இந்தியர்கள் பாதுகாப்பான முறையில் வெளியேறுவதற்கு உக்ரைன் மக்கள் போதுமான அனைத்து உதவிகளையும் செய்து வருகின்றனர். இந்த நெருக்கடியான சூழலில் அவர்களின் உணர்வுகளுக்கு இந்தியர்களாகிய நாம் மதிப்பளித்து நடக்க வேண்டும்.' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

இந்திய தூதரகத்தின் புதிய அறிவிப்பின் மூலம் உக்ரைன் தலைநகர் கீவ்வை ரஷ்யா எந்த நேரத்திலும் கைப்பற்றும் நிலை ஏற்பட்டிருப்பதை அறியலாம். பெலாரஸ் நாட்டில் ரஷ்யா - உக்ரைன் இடையே பேச்சுவார்த்தை நடைபெறும் நிலையில், ரஷ்யா தனது தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகிறது.
Published by:Musthak
First published:

Tags: Russia - Ukraine

அடுத்த செய்தி