Exclusive | எங்களுடைய விஷயங்களில் யாரும் தலையிடக்கூடாது.. உலகிற்கு தாலிபான் சொல்லும் செய்தி - தாலிபான் தளபதி அனஸ் ஹக்கானி

அனஸ் ஹக்கானி

உலகில் உள்ள அனைவருடனும் நல்ல உறவை நாங்கள் விரும்புகிறோம் என தாலிபான் தளபதி அனஸ் ஹக்கானி கூறியுள்ளார்.

  • Share this:
    தாலிபான் தளபதியும் ஹக்கானி நெட்வொர்க் கிளர்ச்சிக் குழுவின் மூத்த தலைவருமான அனஸ் ஹக்கானி, சிஎன்என் – நியூஸ் 18 உடனான பிரத்யேக உரையாடல்.

    கேள்வி: இன்று உங்களுக்கு ஒரு சிறந்த நாள். அமெரிக்கர்கள் சென்றுவிட்டனர்.

    பதில்: மிக்க நன்றி, ஆம் எங்களுக்கு இது ஒரு பெரிய நாள்

     கேள்வி: 20 ஆண்டுகளுக்கு பிறகு நீங்கள் வெற்றி பெற்றுள்ளீர்கள். ஆப்கானில் அமைதி நிலவும் என்றும்  நீங்கள் கூறியுள்ளீர்கள்

    பதில் : இது கடவுளின் ஆசீர்வாதம். கடவுளின் ஆசீர்வாதத்திற்காக நாங்கள் 20 ஆண்டுகளாக போராடினோம். இன்று இது எங்கள் நாள். சுதந்திரம் பெற்ற நாள். இங்குள்ள அனைவரும் மகிழ்ச்சியாக உள்ளனர். எதிர்காலத்தில் இன்னும் அழகான நாட்கள் வரும் என்று நம்புகிறேன்.

    Also Read:  ஆப்கானிலிருந்து முழுமையாக வெளியேறியது அமெரிக்க படை

    கேள்வி: உலக நாடுகளையும் அதன் ஆதரவுகளையும் எப்படி பார்க்கிறீர்கள்.

     பதில்: எங்களின் கொள்கையின் படி மற்றவர்களின் விஷயத்தில் நாங்கள் தலையிட மாட்டோம். மற்றவர்களும் எங்களுடைய விஷயத்தில் தலையிடக்கூடாது என எதிர்பார்க்கிறோம். அனைத்து விஷயங்களும் சுமூகமாக தீர்க்கப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.  எங்கள் கதவுகள் அனைவருக்கும் திறந்து இருக்கும். உலகின் பிற பகுதிகளுடன் நாங்கள் நல்ல உறவை விரும்புகிறோம்.

    கேள்வி: ஹக்கானி குழுவானது பாகிஸ்தான் ஐஎஸ்ஐ, மற்றும் பாகிஸ்தான் ராணுவத்தோடு நெருக்கமான தொடர்புடையது. இப்போது நீங்கள் ஆப்கானிஸ்தான் அரசின் ஒரு அங்கமாக உள்ளீர்கள். அவர்களுடனான உங்கள் தொடர்பு எப்படியானது?

    பதில்: நாங்கள் 20 ஆண்டுகளாக போராடினோம், எங்களைப் பற்றி நிறைய எதிர்மறையான பிரச்சாரங்கள் செய்யப்பட்டுள்ளது. அது தவறானது. ஹக்கானி குழு என்பது ஒன்றும் இல்லை. நாங்கள் அனைவருக்கும் வேலை செய்கிறோம். உலகம் முழுவதும் ஊடகங்கள் குறிப்பாக இந்திய ஊடகங்கள் எங்களைப் பற்றி எதிர்மறையான பிரச்சாரத்தை பரப்புகின்றன. போரில் பாகிஸ்தான் ஆயுதங்கள் பயன்படுத்தப்படவில்லை. இவை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள்.

    Also Read: வறுமையின் பிடியில் ஆப்கான்: கடும் பண நெருக்கடி- மக்களின் துயரம்

    கேள்வி: இந்தியாவுடன் ஹக்கானி குழு எப்படியான உறவை எதிர்பார்க்கிறது

     பதில்: நாங்கள் இந்தியாவுடன் நல்ல உறவையே விரும்புகிறோம். யாரும் எங்களைப்பற்றி தவறாக நினைப்பதை நாங்கள் விரும்பவில்லை. இந்தியா எங்களின் எதிரிக்கு 20 ஆண்டுகளாக உதவியது ஆனால் எல்லாவற்றையும் மறந்து நல்ல உறவை முன்னெடுத்துச்செல்ல நாங்கள் தயாராக இருக்கிறோம்.

    கேள்வி: பாகிஸ்தானுக்கு ஹாக்கானிஸுக்கும் மிக நெருக்கமான உறவு உள்ளது. பாகிஸ்தான் காஷ்மீரில் தொடர்ந்து தலையிடுகிறது. பாகிஸ்தானை ஆதரிக்கும் நீங்களும் காஷ்மீரில் தலையிடுவீர்களா?

    பதில்: காஷ்மீர் எங்கள் அதிகார வரம்பின் பகுதி அல்ல. மேலும் அது எங்கள் கொள்கைக்கு எதிரானது. எங்கள் கொள்கைக்கு எதிராக நாங்கள் எப்படி செயல்பட முடியும். நாங்கள் தலையீட மாட்டோம்.

    கேள்வி: நீங்கள் காஷ்மீர் விவகாரத்தில் தலையிட மாட்டோம் என்று சொல்கிறீர்களா? காஷ்மீர் விவகாரத்தில் ஹக்கானி ஜெம் மற்றும் எல்இடி-யை ஆதரிக்கமாட்டீர்களா?

    பதில்: நாங்கள் இதை பல முறை தெளிவுபடுத்தியுள்ளோம். நான் மீண்டும் சொல்கிறேன். இது வெறும் பிரச்சாரம்

    கேள்வி: ஆப்கானிஸ்தானில் இந்தியா  செய்த வளர்ச்சி பணிகள் நிலுவையில் உள்ளன. இந்தியா வந்து திட்டங்களை முடிக்க விரும்பினால் நீங்கள் அனுமதிப்பீர்களா?

    பதில்: வரும் நாட்களில் எங்களின் அனைத்து கொள்கைகளையும் தெளிவுப்படுத்துவோம். ஆப்கான் மக்களுக்கு உதவ நாங்கள் விரும்புகிறோம்.இந்தியா மட்டுமல்லாது உலகின் பிற நாடுகளும் எங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்

    கேள்வி: ஆப்கானிஸ்தானில் பல இந்தியர்கள் சிக்கியுள்ளனர். ஆப்கானிய சீக்கியர்களும் இந்துக்களும் அங்கு உள்ளனர். அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக உறுதியளிக்கிறீர்களா

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    பதில்: ஆப்கானிஸ்தானில் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக நான் உறுதியளிக்க விரும்புகிறேன். ஆரம்பத்தில் சில பீதியும் பயமும் இருந்தது. ஆனால் இப்போது எல்லாம் மாறிவிட்டன மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். ஆப்கானின் சீக்கியர்களும், இந்துக்களும் ஆப்கானிஸ்தானின் மற்ற சமூகங்களைப்போலவே இருக்கிறார்கள். அவர்கள் மகிழ்ச்சியாக வாழ்வார்கள்.

    கேள்வி: ஆப்கானிஸ்தானில் உள்ள பெண்கள் அச்சத்தில் வாழ்கிறார்கள் மற்றும் அவர்களின் சுதந்திரம் முடிந்துவிட்டது என்று கூறுகிறார்கள். தாலிபான்களுடன் பெண்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்று நீங்கள் என்ன உறுதியளிக்க முடியும்

    பதில் : இது வரும் நாள்களில் நிரூபிக்கப்படும். ஆண்கள் மற்றும் பெண்களுக்கான அனைத்து கொள்கைகளையும் நாங்கள் அறிவிப்போம் எல்லாம் வெளிப்படையாக இருக்கும்

    கேள்வி: நீங்கள் இந்த உலகிற்கு என்ன செய்தி கொடுக்க விரும்புகிறீர்கள்

    பதில்:  நாங்கள் அர்ப்பணிப்புள்ளவர்கள் என்று இந்த உலகிற்கு நன்றாக தெரியும். உலகில் உள்ள அனைவருடனும் நல்ல உறவை நாங்கள் விரும்புகிறோம். ஆனால் உலகின் மற்ற பகுதிகள் எங்களுடைய விஷயங்களில் தலையிடக்கூடாது என்று நாங்கள் விரும்புகிறோம். அவர்களுடைய விஷயங்களிலும் நாங்கள் தலையிட மாட்டோம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
    Published by:Ramprasath H
    First published: