Home /News /international /

Exclusive : ''எங்கு செல்வதென்றே தெரியவில்லை'' உக்ரைனில் சிக்கிய கோவை மாணவி பிரத்யேக பேட்டி

Exclusive : ''எங்கு செல்வதென்றே தெரியவில்லை'' உக்ரைனில் சிக்கிய கோவை மாணவி பிரத்யேக பேட்டி

ரஷ்ய ராணுவம் பொதுமக்களை தாக்குவதில்லை. அவர்கள் உக்ரைன் பாதுகாப்பு படையை குறி வைத்து தாக்குதல் நிகழ்த்துகின்றனர். உக்ரைன் வீதிகளில் ஆம்புலன்ஸ்கள் சத்தத்தை அதிகம் கேட்க முடிகிறது.

உக்ரைனில் ரஷ்ய ராணுவம் தாக்குதலை ஆரம்பித்துள்ள நிலையில், அங்குள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில், நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு உக்ரைனில் மருத்துவம் படித்துக் கொண்டிருக்கும் கோவை மாணவி அழகு லட்சுமி பிரத்யேக தகவல் அளித்துள்ளார்.

மாணவி அழகு லட்சுமி அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது-

காலையில் சுமார் 5.30 மணியளவில் வெடிகுண்டு சத்தம் கேட்டது. அருகில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு எங்களுடன் தொடர்பு கொண்டு, ரஷ்யா தாக்குதலை ஆரம்பித்துள்ளதாக கூறினார்கள்.

தலைநகர் கீவ்வில் என்ன நடக்கப் போகிறது என்பதை கணிக்க முடியவில்லை. அத்தியாவசிய பொருட்கள் அனைத்தையும் மக்கள் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மிகுந்த பதற்றத்தில் இருக்கிறார்கள். ஓர் அவசர நிலைக்கு உக்ரைன் மக்கள் தயாராகி வருகின்றனர். நாங்களும் எங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கிக் கொண்டோம். நாங்கள் 11 மாணவர்கள் இங்கு சிக்கிக்கொண்டோம்.

இதையும் படிங்க - நோட்டோ படைகள், அமெரிக்கா தலையீடு; ரஷ்யா - உக்ரைன் போர் தொடங்கியது எப்படி?

இங்கு நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம். மார்ச் 1ம் தேதி நாடு திரும்புவதற்காக நாங்கள் டிக்கெட் புக் செய்திருந்தோம். ஆனால், இங்கு விமானப் போக்குவரத்தை தடை செய்து விட்டனர். என்ன செய்வது, எங்கு செல்வது என்று தெரியாமல் உள்ளோம். இந்தியா திரும்புவதற்கு நாங்கள் விரும்புகிறோம்.

வெளியில் சென்றால் தான் பிரச்னை வரும் என்ற நிலை உள்ளது. கல்லூரி நிர்வாகத்திற்கு நாங்கள் இந்தியர்கள் என்பது தெரியும். நாங்கள் தொடர்ந்து இந்திய தூதரகத்துடன் தொடர்பில் உள்ளோம். அவர்கள் தரும் ஒவ்வொரு தகவல்களையும் கவனித்து வருகிறோம். தற்போதைக்கு உணவுப் பிரச்னை ஏதும் இல்லை.

இதையும் படிங்க - உக்ரைன்-ரஷ்ய தலைவர்களிடம் பேசி போரை உடனடியாக நிறுத்த பிரதமர் மோடியிடம் கோரிக்கை

ரஷ்ய ராணுவம் பொதுமக்களை தாக்குவதில்லை. அவர்கள் உக்ரைன் பாதுகாப்பு படையை குறி வைத்து தாக்குதல் நிகழ்த்துகின்றனர். உக்ரைன் வீதிகளில் ஆம்புலன்ஸ்கள் சத்தத்தை அதிகம் கேட்க முடிகிறது.

மக்கள் ஆபத்தில்தான் இருக்கிறார்கள். உக்ரைன் ராணுவம் தாக்குதல் நடத்துவதைப் பார்த்து இங்குள்ள மக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர். ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்துவது எங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால் குண்டுகள் வீசுவதுதான் ஓர் ஆபத்தாக இருக்கிறது.

உக்ரைனின் சில பகுதியில் இணைய தொடர்புகளில் பிரச்னை உள்ளது. 2 வாரங்களாக ரஷ்யாவுடன் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தன. உக்ரைன் மக்களும் போர் நடக்காது என்பதில் உறுதியாக இருந்தனர். இதனால், நாங்கள் முன்கூட்டியே இந்தியா திரும்ப வேண்டும் என்ற எண்ணம் ஏற்படவில்லை. ஆனால் திடீரென இன்று காலைதான் தாக்குதல் ஆரம்பித்தது. இதை நாங்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Published by:Musthak
First published:

Tags: Russia - Ukraine

அடுத்த செய்தி