ஹோம் /நியூஸ் /உலகம் /

டிரம்ப்பின் முன்னாள் வழக்கறிஞருக்கு 3 ஆண்டுகள் சிறை

டிரம்ப்பின் முன்னாள் வழக்கறிஞருக்கு 3 ஆண்டுகள் சிறை

மைக்கேல் கோஹென்

மைக்கேல் கோஹென்

Ex-Trump Lawyer Cohen Gets 3 Years in Jail | 2016-ம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் போட்டியிட்ட போது, ஆபாச பட நடிகை உள்பட 2 பெண்கள் டிரம்ப் மீது பாலியல் புகார் சுமத்தினர்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

டிரம்ப் கூறியதால் ஆபாசப்பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் அவரின் முன்னாள் வழக்கறிஞர் மைக்கேல் கோஹெனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் போட்டியிட்ட போது, ஆபாச பட நடிகை உள்பட 2 பெண்கள் டிரம்ப் மீது பாலியல் புகார் சுமத்தினர். அவர்களுக்கு டிரம்ப்பின் அப்போதைய தனிப்பட்ட வழக்கறிஞர் மைக்கேன் கோஹன் பணம் கொடுத்து வாயை அடைத்ததாக புகார் எழுந்தது.

Donald Trump | அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்

சமீபத்தில் இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் கோஹன் தான் குற்றம் செய்ததை கோர்ட்டில் ஒத்துக்கொண்டார். டிரம்ப் கூறியே தான் இப்படி செய்ததாக அவர் தெரிவித்திருந்தார்.

இதனால், தேர்தல் விதிமுறைகளை மீறி பணம் கொடுக்கப்பட்டுள்ளதால் டிரம்ப்பை பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என அமெரிக்காவில் குரல் எழுந்தது. இந்நிலையில், கோஹனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Also See..

Published by:Sankar
First published:

Tags: Donald Trump