கர்ப்பமடைந்ததற்காக பெண்ணை வேலையைவிட்டு நீக்கிய நெட்ஃப்ளிக்ஸ்... பாய்ந்தது வழக்கு!

உருவ தோற்றத்தை வைத்து உயர் அதிகாரி விமர்சித்தது மட்டுமல்லாமல் எவ்வித அறிவிப்பும் இன்றி பணி நீக்கம் செய்ததற்காக நெட்ஃப்ளிக்ஸ் மீது வழக்குப் பாய்ந்துள்ளது.

Web Desk | news18
Updated: April 4, 2019, 1:36 PM IST
கர்ப்பமடைந்ததற்காக பெண்ணை வேலையைவிட்டு நீக்கிய நெட்ஃப்ளிக்ஸ்... பாய்ந்தது வழக்கு!
நெட்ஃப்ளிக்ஸ்
Web Desk | news18
Updated: April 4, 2019, 1:36 PM IST
நெட்ஃப்ளிக்ஸ் பெண் ஊழியர் ஒருவர் தான் கர்ப்பம் அடைந்த காரணத்துக்காக தன்னைப் பணி நீக்கம் செய்த நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் மீது வழக்குத் தொடர்ந்துள்ளார்.

நெட்ஃப்ளிக்ஸில் பணியாற்றிய தானியா ஜாரக் என்ற பெண் அந்நிறுவனத்தில் சர்வதேச ஒரிஜினல்ஸ் பிரிவில் மேனேஜராகப் பணியாற்றி வந்துள்ளார். கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் தானியா தான் கர்ப்பமடைந்திருப்பதை நண்பர்களிடம் பகிர்ந்துள்ளார்.

அதன் பின்னர் அவர் அலுவலகத்தில் கடுமையான மன உளைச்சலை சந்தித்ததாகவும், தன் தோற்றத்தையும் தனக்கு ஏற்பட்ட எதிர்மறை விமர்சனங்களையும் குறிப்பிட்டு தற்போது வழக்குத் தொடர்ந்துள்ளார். உருவத் தோற்றத்தை வைத்து உயர் அதிகாரி விமர்சித்தது மட்டுமல்லாமல் எவ்வித அறிவிப்பும் இன்றி பணி நீக்கம் செய்ததற்காக நெட்ஃப்ளிக்ஸ் மீது வழக்கு பாய்ந்துள்ளது.


கொடுக்காத சம்பளம், போனஸ், பேட்டா, வலி, வேதனை, மன உளைச்சல் என அனைத்துக்கும் சேர்த்து நஷ்டை ஈடு கேட்டும் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


Loading...


மேலும் பார்க்க: ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் பெங்களூருக்கு என்னதான் ஆச்சு?
First published: April 4, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...