”கஷோகியை கொலை செய்தது சவுதி தான்...”- ஐ.நா. திட்டவட்ட அறிக்கை

அமெரிக்க உளவுத்துறையில் ஆய்வில், ஜமால் கஷோகி சவுதி இளவரசர் முகமதுவின் உத்தரவின் பெயரில் அவரது ஆட்களால் கொல்லப்பட்டார் எனத் தெரிவிக்கப்பட்டது.

Web Desk | news18
Updated: February 8, 2019, 12:19 PM IST
”கஷோகியை கொலை செய்தது சவுதி தான்...”- ஐ.நா. திட்டவட்ட அறிக்கை
ஜமால் கஷோகி
Web Desk | news18
Updated: February 8, 2019, 12:19 PM IST
பத்திரிகையாளர் கஷோகி சவுதி அரசால் திட்டமிடப்பட்டு கொலை செய்யப்பட்டது ஆதாரத்துடன் நிரூபணம் ஆகியுள்ளது என ஐ.நா-வின் விசாரணைக் கமிஷன் அறிவித்துள்ளது.

வாஷிங்டன் போஸ்ட்-ன் சவுதி அரேபியாவுக்கான பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்தில் படுகொலை செய்யப்பட்டார். அவரது உடல் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை.

ஆனால், அமெரிக்க உளவுத்துறையில் ஆய்வில், ஜமால் கஷோகி சவுதி இளவரசர் முகமதுவின் உத்தரவின் பெயரில் அவரது ஆட்களால் கொல்லப்பட்டார் எனத் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், இந்தக் குற்றசாட்டை சவுதி இளவரசர் ஏற்கவில்லை. சவுதி அரசும் இக்குற்றச்சாட்டை மறுத்தது. இதையடுத்து அமெரிக்க உளவுத்துறை மூலம் கிடைத்த ஆதாரங்களையும், துருக்கி அரசிடம் உள்ள ஆதாரங்களையும் இணைத்து துருக்கி அரசு கஷோகியின் மரணத்துக்கு நியாயம் கேட்கத் தொடங்கியது.

விளைவு, பிரச்னை ஐ.நா-விடம் சென்றது. இதையடுத்து ஐ.நா-வால் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. இந்த விசாரணைக் குழுவின் அறிக்கையில் தான் தற்போது கஷோகியின் மரணம் சவுதியாலே நிகழ்ந்தது எனக் கூறப்பட்டுள்ளது.

இதுவரையில் சவுதியிடமிருந்து இக்குற்றச்சாட்டுக்கு எவ்வித பதிலும் வெளியாகவில்லை.

மேலும் பார்க்க: குக்கர் VS இரட்டை இலை
Loading...
First published: February 8, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...