ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ், ஒவ்வொரு 11 நிமிடங்களுக்கும் ஒரு பெண் அல்லது சிறுமி நெருங்கிய வட்டம் அல்லது குடும்ப உறுப்பினரால் கொல்லப்படுவதாகவும் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறை உலகில் மிகவும் பரவலான மனித உரிமை மீறலாக மாறி வருகிறது என்றும் கூறினார்.
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 25 அன்று அனுசரிக்கப்படும் "பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினத்தின் இந்த ஆண்டு கருப்பொருள் “ பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒருங்கிணைந்த செயல்பாடு- UNITE: Activism to end Violence against Women and Girls" என்பதாகும். சிறப்புவாய்ந்த இந்த தினத்தை முன்னிட்டு ஐ.நா. செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.
கோவிட்-19 மற்றும் உலகப் பொருளாதாரப் பிரச்சனைகள் அதிக உடல் மற்றும் வாய்மொழி துஷ்பிரயோகத்திற்கு வழிவகுத்துள்ளதாக குட்டெரெஸ் எடுத்துரைத்தார். மேலும் பெண்களுக்கு எதிரான வெறுக்கத்தக்க பேச்சு, பாலியல் துன்புறுத்தல், உருவ துஷ்பிரயோகம் ஆகியவற்றின் மூலம் ஆன்லைனில் வன்முறைகளை பெண்கள் எதிர்கொள்வதை சுட்டிக்காட்டினார்.
இதையும் படிங்க: மலேசியாவில் முதல் முறையாக கூட்டணி ஆட்சி…டெபாசிட் இழந்த மகாதீர்!
வன்முறை மற்றும் பாரபட்சமான செயல்களால் பெண்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரங்கள் மறுக்கப்படுகின்றன. இந்த சம்பவங்கள் சமூகத்தில் பெண்களின் பங்கேற்பையும் பொருளாதார மற்றும் நிலையான வளர்ச்சியையும் கட்டுப்படுத்துகிறது என்று குட்டெரெஸ் கூறினார்.
பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் இது. இதை சமாளிக்க தேசிய செயல் திட்டங்களை வடிவமைத்து, நிதியளித்து செயல்படுத்துமாறு அரசாங்கங்களை வலியுறுத்தினார்.
மேலும், 2026 ஆம் ஆண்டிற்குள் பெண்கள் உரிமை அமைப்புக்கள் மற்றும் இயக்கங்களுக்கு நிதியுதவியை 50% அதிகரிக்குமாறு அரசாங்கங்களை ஐ.நா பொதுச்செயலாளர் கேட்டுக் கொண்டார்.
இதையும் படிங்க: பருவநிலை மாற்ற இழப்புகளை ஈடு செய்ய சேத நிதி: ஐ.நா பருவநிலை மாநாட்டில் ஒப்புதல்
குட்டெரெஸின் கருத்துக்களை அடிப்படையாக கொண்டு ஐ.நா பெண்கள் மற்றும் ஐ.நா புள்ளியியல் பிரிவு இணைந்து "நிலையான வளர்ச்சி இலக்குகளின் முன்னேற்றம்: பாலின ஸ்னாப்ஷாட் 2022" என்ற தலைப்பில் ஒரு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. உலகெங்கிலும் உள்ள பிராந்தியங்கள் முழுவதும் வெவ்வேறு இலக்குகளில் முன்னேற்றத்தை இது மதிப்பிடுகிறது மற்றும் வீடுகளுக்குள் வன்முறை தொடர்ந்து பிரச்சினையாக இருப்பதை குறிப்பிடுகிறது.
15 முதல் 49 வயதுக்குட்பட்ட பத்தில் ஒருவர் 1 அவரது நெருக்கமான துணையால் பாலியல் அல்லது உடல் ரீதியான வன்முறைக்கு ஆளாகியுள்ளனர் என்று அறிக்கை எடுத்துக்காட்டுகிறது. கோவிட்-19 தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து நான்கில் ஒரு பெண் வீட்டில் அடிக்கடி இதுபோன்று நடப்பதாகக் கூறுகிறார்கள். பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளைத் தடுக்கும் சட்டங்கள் எல்லா இடங்களிலும் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு குறைந்தது இரண்டு தசாப்தங்கள் ஆகும் என்று அறிக்கை கூறுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Sexual harrasment, United Nation, Verbally harrased, Women safety