சர்வதேச விமான போக்குவரத்து சங்கம் (IATA) வழங்கிய பிரத்தியேக தரவுகளின் அடிப்படையில் லண்டனை தளமாகக் கொண்ட உலகளாவிய குடியுரிமை மற்றும் குடியிருப்பு ஆலோசனை நிறுவனமான ஹென்லி & பார்ட்னர்ஸ் 2023 ஆம் ஆண்டிற்கான ஹென்லி பாஸ்போர்ட் குறியீட்டை வெளியிட்டுள்ளது.
ஒவ்வொரு நாட்டின் பாஸ்போட்டும் அதன் மக்களுக்கு எத்தனை நாடுகளுக்கான விசா இல்லாத அணுகல்களையும், இலகுவான பிராசஸிங் வலிகளையும் தருகிறது என கணக்கிடப்படுகிறது. பாஸ்போர்ட்டின் நுணுக்கமான, நடைமுறை மற்றும் நம்பகதன்மையை கருத்தில் கொள்கிறது. ஒவ்வொரு பாஸ்போர்ட்டையும் வைத்திருப்பவர் விசா இல்லாமல் அணுகக்கூடிய மொத்த இடங்களின் எண்ணிக்கையில் மதிப்பெண் பெறப்படுகிறது.
இந்த மதிப்பெண்களை கொண்டு 199 நாடுகள் பட்டியலிடப்படுகின்றன. அதில், ஜப்பான் தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக முதல் இடத்தைப் பிடித்துள்ளது. அதாவது ஜப்பானின் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் விசா இல்லாமல் 193 நாடுகளை அணுகலாமாம். என்ன ஒரு கொடுப்பினை பாருங்கள்...
பாஸ்போர்ட் குறியீட்டில் சென்ற ஆண்டு 87 வது இடத்தில் இருந்த இந்தியா இரண்டு இடங்கள் முன்னேறி 85வது இடத்தில் உள்ளது. நம் நாடு பாஸ்போர்ட் வைத்து 59 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லலாம்.
உலகம் முழுவதும் உள்ள 227 பயண இடங்களுக்கான அணுகலுக்கு எதிராக அளவிடப்படுகின்றன. ஹென்லி பாஸ்போர்ட் பவர் மதிப்பெண்களின்படி, உலகப் பொருளாதாரத்தில் 70 சதவீதத்திற்கும் அதிகமான நாடுகளுக்கான அணுகலை உலக நாடுகளில் 6 சதவீதம் மட்டுமே வழங்குகிறது.
இந்த ஆண்டு பட்டியலில் இடம்பெற்றுள்ள முதல் 10 நாடுகள்:
1. ஜப்பான்
2. சிங்கப்பூர்
3. தென் கொரியா
4. ஜெர்மனி
5. ஸ்பெயின்
6. பின்லாந்து
7. இத்தாலி
8. லக்சம்பர்க்
9. ஆஸ்திரியா
10. டென்மார்க்
சிங்கப்பூர் மற்றும் தென் கொரியா பாஸ்போர்ட்டுகள், 2 வது இடத்தில், 192 நாடுகளுக்கு விசா இல்லாத அணுகலை வழங்குகின்றன. ஆப்கானிஸ்தான், நாடு கடந்து வரும் அமைதியின்மையுடன், குறியீட்டில் 109 வது இடத்தில் உள்ளது. 27 நாடுகள் மட்டுமே ஆப்கானிஸ்தானின் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு விசா இல்லாமல் அணுக அனுமதிக்கின்றன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Passport