பாதுகாப்பு காரணங்களுக்காக உக்ரைனின் சுமி நகரில் இருந்து இந்திய மாணவர்களை வெளியேற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
உக்ரைனின் கீவ், கார்கிவ், சுமி உள்ளிட்ட நகரங்களில் ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் அந்நாட்டில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை மீட்கும் முயற்சியில் மத்திய அரசு முழு வீச்சில் ஈடுபட்டுள்ளது. போலந்து, ருமேனியா உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு விமானங்கள் அனுப்பப்பட்டு, இந்திய மாணவர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர்.
இதனிடையே, தாக்குதல் தீவிரமடைந்து வரும் சுமி நகரில் இருந்து இந்திய மாணவர்களை மீட்கும் பணி, பாதுகாப்பு காரணங்களால் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மாணவர்களை அழைத்து செல்ல பேருந்துகள் சென்ற நிலையில், போதிய பாதுகாப்பு இல்லாததால், மாணவர்களை அனுப்ப வேண்டாம் என பல்கலைக்கழக நிர்வாகத்திடம் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
விடுதிகளில் பாதுகாப்பாக இருக்குமாறு மாணவர்கள் அறிவுறுத்தப் பட்டுள்ளனர். இந்நிலையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் உரையாற்றிய இந்தியவுக்கான நிரந்தர தூதர் திருமூர்த்தி, உக்ரைன் மற்றும் ரஷ்யாவிடம் பலமுறை வலியுறுத்தியும் இந்திய மாணவர்கள் வெளியேறும் வகையில் பாதுகாப்பு வழித்தடம் அமைத்து தராதது கவலை அளிப்பதாகவும், உக்ரைனில் இருந்து பொதுமக்கள் வெளியேறுவதற்கான பாதுகாப்பான வழித்தடம் அமைக்கப்பட வேண்டும் எனவும் கூறினார்.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.