முகப்பு /செய்தி /உலகம் / தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடு… ரஷ்யா மீது ஐரோப்பிய நாடாளுமன்றம் பகீர் குற்றச்சாட்டு

தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடு… ரஷ்யா மீது ஐரோப்பிய நாடாளுமன்றம் பகீர் குற்றச்சாட்டு

ரஷ்ய அதிபர் புதின்

ரஷ்ய அதிபர் புதின்

  • Last Updated :
  • interna, IndiaRussiaRussia

உக்ரைன் மீது ரஷ்யா போர் நடத்தி வருவதால் ரஷ்யா தீவிரவாதத்தை முழுமையாக ஆதரிக்கும் நாடு என ஐரோப்பிய நாடாளுமன்றம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

நேட்டோவில் சேரும் முடிவை உக்ரைன் முன்னெடுத்ததை தொடர்ந்து அந்நாட்டு மீது கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் நாள் ரஷ்யா போர் தொடுத்தது. போர் தொடங்கி ஒன்பது மாதங்கள் முடிந்துள்ளன. இதுவரை போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தையைக் கூட முன்னெடுக்க ரஷ்யா முன்வரவில்லை.  இதனால் மேற்குலக நாடுகளின் கடுமையான கண்டனங்களுக்கும் விமர்சனங்களுக்கும் ஆளாகியுள்ளது ரஷ்யா.

ஆனால் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், உக்ரைனுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை தொடர்ந்து வருகிறது ரஷ்யா. இந்த போரில் ஆயிரக்கணக்கான பொதுமக்களும் வீரர்களும் இறந்துள்ளதாக சர்வதேச சமூகம் குற்றம் சாட்டி வருகிறது.

ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்க மற்றும் ஐரோப்பா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் உக்ரைனுக்கு பொருள் மற்றும் ராணுவ ரீதியிலான உதவிகளை செய்து வருகின்றன.

போரில் உக்ரைனின் சில நகரங்களை ரஷ்யா தங்கள் நாட்டுடன் இணைத்துக் கொண்டது. ரஷ்ய படைகள் கைப்பற்றிய பகுதிகளை உக்ரைன் மீட்டு வருவதால்  இரு தரப்புக்கும் இடையே மோதல் அதிகரித்து உயிரிழப்பு சம்பவங்களும் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் ரஷ்யா பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடு என ஐரோப்பிய நாடாளுமன்றம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையும் வலியுறுத்தி வருகிறது. உலகின் மிகப்பெரிய உணவு தானிய மற்றும் உர உற்பத்தியாளர்களாக ரஷ்யாவும் உக்ரைனும் திகழ்ந்து வருகின்றன. இரு நாடுகளுக்கிடையே நடைபெற்று வரும் போரால் உலக அளவில் உணவு தானியம் மற்றம் உரத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மேற்குலக நாடுகள் மற்றும் ஆப்பரிக்க நாடுகளில் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஆப்கானிஸ்தானில் மீண்டும் நடைமுறைக்கு வந்த கசையடி தண்டனை…

இது தொடர்ந்தால் பல நாடுகளில் பொருளாதார சிக்கல் ஏற்படும் என நிபுணர்கள் எச்சரித்து வருவதால் போரை நிறுத்துவதற்கான நடவடடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தி வருகிறது. எத்தனை நெருக்கடிகள் வந்தாலும் தனது கொள்கையில் உறுதியாக இருக்கும் ரஷ்யா உக்ரைன் மீதான தனது தாக்குதலை நிறுத்தாமல் தொடர்ந்து வருகிறது.

ரஷ்ய ராணுவம் உக்ரைனில் பொதுமக்கள்,மருத்துவமனை, பள்ளிகள், குடியிருப்புகள்,மின் கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதையும் சர்வதேச நாடுகள் கண்டித்துள்ளன. இந்நிலையில் தான் ஐரேப்பிய நாடாளுமன்றம் ரஷ்யாவை தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடு என பகிரங்கமாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

top videos

    செய்தியாளர்: ரொசாரியோ ராய்

    First published:

    Tags: Russia, Russia - Ukraine, Vladimir Putin