ஓமைக்ரான் மாறுபாடு கோவிட் -19 தொற்றுநோயை ஒரு புதிய கட்டத்திற்கு நகர்த்தியுள்ளது மற்றும் ஐரோப்பாவில் கொரோனா முடிவுக்கு வரலாம் என சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளது நம்பிக்கையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
கடந்த 2019ம் ஆண்டின் இறுதியில் சீனாவின் வூகான் நகரில் உள்ள மார்க்கெட் ஒன்றில் இருந்து முதல் முறையாக கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. அங்கிருந்து உலக நாடுகளுக்கு மெல்ல பரவிய கொரோனா வைரஸ் விரைவிலேயே உலக நாடுகளை தன் பிடியில் கொண்டு வந்து பெருந்தொற்று நோயாக மாறியது. கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கிய போதிலும், புதிய வகை கொரோனா மாறுபாடுகள் முந்தைய கொரோனா வைரஸை காட்டிலும் பேரழிவை ஏற்படுத்தியது. இதில் ஆபத்தான் டெல்டா வகை மாறுபாடு உலக நாடுகள் பலவற்றிலும் உயிரிழப்பை பெருமளவில் ஏற்படுத்தியது.
இந்த காலகட்டத்தில் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்ததையடுத்து, கொரோனா தொற்று ஓரளவுக்கு கட்டுக்குள் வந்தது. இதனிடையே, தென் ஆப்பிரிக்காவில் ஓமைக்ரான் எனும் புதிய வகை கொரோனா வைரஸ் முந்தைய வேறுபாடுகளை விட மிக அதிக வேகத்தில் பரவக்கூடியது என கண்டறியப்பட்டது. சொன்னது போலவே ஒரு சில வாரங்களிலேயே உலகத்தை தனது கட்டுக்குள் கொண்டு வந்தது ஓமைக்ரான். எனினும் தடுப்பூசி போடும் பணிகள் விரைவாக நடத்தப்பட்டதன் பலனாக் ஓமைக்ரான் பாதிப்பு கடுமையாக இல்லாமல் இருந்து வந்தது.
Also read: துரதிர்ஷ்டவசமாக பாஜகவை 25 வருடங்களாக வளர்த்துவிட்டோம் - உத்தவ் தாக்கரே
இந்நிலையில், ஓமைக்ரான் காரணமாக அடுத்தகட்ட கொரோனா அலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா பரவல் முடிவுக்கு வருவதாக சுகாதார நிபுணர்கள் ஆறுதலான செய்தியை வெளியிட்டுள்ளனர்.
உலக சுகாதார அமைப்பில் ஐரோப்பா பிரிவு இயக்குனர் Hans Kluge, ஏஃப்பி செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், “தொற்று நோய் பரவல் அதன் இறுதிக் கட்டத்தை நோக்கி நகர்கிறது என்பது நம்பத்தகுந்த விஷயம். மார்ச் மாதவாக்கில் 60% ஐரோப்பியர்கள் கொரோனாவால் பாதிக்கப்படலாம். ஓமைக்ரான் உச்சநிலை குறையத்தொடங்கிய பின்னர், அடுத்த சில வாரங்கள், மாதங்களுக்கு பரந்த நோயெதிர்ப்பு திறன் மக்களிடையே ஏற்படக்கூடும். இது தடுப்பூசி, காலநிலை மாற்றம் அல்லது நோய்த்தொற்று பாதிப்பு காரணமாக இருக்கலாம்.
Also read: சோதனையில் சிக்காத "கள்ள ஒமைக்ரான்".. முந்தைய வகைகளைக் காட்டிலும் அதிவேகமாக பரவுவதால் அச்சம்!
கோவிட்-19 இந்த ஆண்டின் இறுதியில் மீண்டும் வருவதற்கு முன் அமைதியான காலம் இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம், ஆனால் தொற்றுநோய் மீண்டும் வர வேண்டிய அவசியமில்லை. அதே நேரத்தில் மிகுந்த எச்சரிக்கையும் அவசியம். ஏற்கனவே சில முறை கொரோனா மாறுபாடுகள் நம்மை வியப்பில் ஆழ்த்தியிருக்கின்றன என்பது கவனிக்கத்தக்காதும்” என அவர் தெரிவித்தார்.
இதே போல அமெரிக்காவின் முன்னணி விஞ்ஞானியான Anthony Fauci செய்தி நிறுவனத்துக்கு நேற்று அளித்த பேட்டியில், இந்த வாரம் தொற்று நோய் பரவல் பெருமளவில் குறையத்தொடங்கும் என தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.