முகப்பு /செய்தி /உலகம் / அனலில் தகிக்கும் ஐரோப்பா.. 30 ஆண்டுகளில் இல்லாத காட்டுத்தீ - மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..

அனலில் தகிக்கும் ஐரோப்பா.. 30 ஆண்டுகளில் இல்லாத காட்டுத்தீ - மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..

ஐரோப்பா

ஐரோப்பா

ஐரோப்பிய கண்டம் முழுவதும் வெப்பம் மற்றும் காட்டுத் தீயினால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

பிரிட்டன், ஜெர்மனி, போர்ச்சுகல் உள்ளிட்ட அனைத்து ஐரோப்பிய நாடுகளிலும் ஆண்டு முழுவதும் மிதமான காலநிலையே நிலவும். ஆனால் தற்போது கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் காட்டுத்தீ பரவிவரும் நிலையில், வடக்கு பகுதியிலோ வெயில் சுட்டெரிக்கிறது. இவை அனைத்தும் பருவநிலை மாற்றத்தின் கோர விளைவுகள் என சுற்றுச்சூழல் நிபுணர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

பிரிட்டனில் முதல் முறையாக 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. இதனால் பயணங்களை தவிர்க்க அரசு கேட்டுக் கொண்டுள்ளது. அங்கு பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. உணவகங்கள் மற்றும் வணிக நிறுவனங்களும் செயல்பட வில்லை. பக்கிங்ஹாம் அரண்மனையில் நடைபெறும் ராணுவத்தினர் அணிவகுப்பும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மக்கள் நீர் நிலைகளை தேடியும் குளிர்ச்சியான பொருட்களை உண்டும் சூட்டை தணித்துக் கொள்கின்றனர்.

பிரான்சில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. அங்கு சுமார் 50,000 ஏக்கரிலான காடுகள் எரிந்து சாம்பலாகியுள்ளன. காட்டுத்தீ காரணமாக 40,000க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

ஏத்தென்சில் பென்டெலி மலை சரிவுகளில் எரிந்து வரும் தீயை கட்டுப்படுத்த முடியாமல், அந்நாட்டு தீயணைப்பு துறையினர் திணறி வருகின்றனர். 15 விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை பயன்படுத்தியும் தீயை அணைக்க முடியவில்லை என அந்நாட்டு அரசு கவலை தெரிவித்துள்ளது. இதனால் பென்டெலி மலை அருகே உள்ள ஏராளமான வீடுகள் தீக்கிரையாகின.

ஐரோப்பாவில் காட்டுத்தீ

Also see... இந்தியா மட்டுமே உதவி வருகிறது.. இலங்கை அமைச்சர் ஆதங்கம்!

ஸ்பெயினின் ஜமோரா மற்றும் சராகோசா மாகாணங்களில் பரவி வரும் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் ராணுவத்தினர் ஈடுப்பட்டுள்ளனர். புல்டவுசர்களை கொண்டு மண் மூடி தீ பரவாமல் தடுக்கும் பணியில் ராணுவத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Also see...  ரணகளத்திலும் ஒரு குதூகலம்.! இலங்கை போராட்டத்திற்கு நடுவே காதல் ஜோடியின் செயல் இணையத்தில் வைரல்

போர்ச்சுகளில் வெப்பம் சற்று தணிந்திருந்தாலும், அங்கு வெயில் தொடர்பான சம்பவங்களால் கடந்த ஒரு வாரத்தில் 1000 பேர் உயிரிழந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மற்றும் ரஷ்ய போரால் உலக அளவில் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், ஐரோப்பாவில் ஏற்பட்டுள்ள தீயால், அதிக பாதிப்பு ஏற்படும் என ஐ.நா எச்சரித்துள்ளது.

First published:

Tags: Heat Wave