Home /News /international /

ஓராண்டில் 1.5 லட்சம் மக்கள் அகதிகளாக குடிபெயர்வு - உணவு தட்டுப்பாட்டில் சிக்கித் தவிக்கும் ஐரோப்பிய நாடுகள்

ஓராண்டில் 1.5 லட்சம் மக்கள் அகதிகளாக குடிபெயர்வு - உணவு தட்டுப்பாட்டில் சிக்கித் தவிக்கும் ஐரோப்பிய நாடுகள்

ஐரோப்பாவில் அகதிகள் எண்ணிக்கை அதிகரிப்பு

ஐரோப்பாவில் அகதிகள் எண்ணிக்கை அதிகரிப்பு

கோதுமை உள்ளிட்ட அடிப்படை உணவு பொருள் தட்டுப்பாடு காரணமாக ஐரோப்பிய கண்டத்தில் உள்ள 140 மில்லியன் மக்கள் பாதிப்புக்கு ஆளாக வாய்ப்புள்ளது.

    ஐரோப்பாவில் வரலாறு காணாத அளவிற்கு அகதிகள் குடிபெயர்வு பிரச்னை தற்போது எழுந்துள்ளது. ரஷ்யா, உக்ரைன் போர் தாக்கம் இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக இத்தாலி, ஸ்பெயின், கிரீஸ், சைப்ரஸ், மால்டா ஆகிய நாடுகளில் இந்த குடியேற்றம் பெரிதும் காணப்படுகிறது. கடந்த ஒரே ஆண்டில் மேற்கண்ட நாடுகளுக்கு 1.5 லட்சம் அகதிகள் வந்துள்ளனர்.

    இதை சைப்ரஸ் நாட்டின் உள்துறை அமைச்சர் நிகோஸ் நோரிஸ் உறுதிப்படுத்தியுள்ளார். இந்த சவாலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து மற்ற நாட்டின் அமைச்சர்களுடன் விவாதிக்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

    உலகின் முன்னணி உணவு பொருள் உற்பத்தி நாடாக உக்ரைன் விளங்குகிறது. இந்த போர் காரணமாக உக்ரைனில் உணவு பொருள் உற்பத்தி முடங்கியுள்ளது. இதையடுத்து ஐரோப்பிய கண்டத்தில் உணவு பொருள் தட்டுப்பாடு எழுந்துள்ளது. இதன் காரணமாக பஞ்சம் ஏற்பட்டு மேலும் அகதிகள் குடிபெயர்வு அபாயம் எழுந்துள்ளதாகவும் ஐரோப்பா கவலை தெரிவித்துள்ளது. கோதுமை உள்ளிட்ட அடிப்படை உணவு பொருள் தட்டுப்பாடு காரணமாக ஐரோப்பிய கண்டத்தில் உள்ள 140 பில்லியன் மக்கள் பாதிப்புக்கு ஆளாக வாய்ப்புள்ளது. கருங்கடலில் கோதுமை உள்ளிட்ட பொருள்கள் தொடர்ந்து முடக்கப்பட்டால், இந்த குடிபெயர்வு மீண்டும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என இத்தாலி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: ஒரே ஒரு பூமி: உலகச் சுற்றுச்சூழல் தினம் - ஜூன் 5!

    உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் 100 நாள்களை தாண்டியுள்ளது. உக்ரைனின் 20 சதவீத நிலப்பரப்பை கைப்பற்றிய ரஷ்யா போரை தற்போதைக்கு நிறுத்துவதாக இல்லை. உலகின் முன்னணி உரம் ஏற்றுமதியாளராக ரஷ்யா உள்ளது. கோதுமை, எண்ணெய், சோளம் போன்ற பொருள்களின் முன்னணி உற்பத்தியாளராக உக்ரைன் உள்ளது. இந்த இரு நாடுகளுக்கு இடையேயான போர் ஐரோப்பிய கண்டத்தில் உணவு பொருள் உற்பத்தியை வெகுவாக பாதித்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் பஞ்சம், விலையேற்றம், அகதிகள் குடிபெயர்வு அதிகரித்துள்ளது.
    Published by:Kannan V
    First published:

    Tags: Migrants, Russia, Russia - Ukraine

    அடுத்த செய்தி