Home /News /international /

பொருளாதார தடை விதிக்கப்பட்ட ரஷ்யாவிடம் இருந்தே எரிபொருள் இறக்குமதி - பலே நேட்டோ நாடுகள்

பொருளாதார தடை விதிக்கப்பட்ட ரஷ்யாவிடம் இருந்தே எரிபொருள் இறக்குமதி - பலே நேட்டோ நாடுகள்

Russia oil

Russia oil

Russia Oil Imports: ரஷ்யா - உக்ரைன் போர் தொடங்கிய பின்னர் ரஷ்யாவிடம் இருந்து 71 சதவீத எரிபொருள் இறக்குமதியை ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மேற்கொண்டுள்ளது புள்ளிவிவரம் மூலம் தெரியவந்துள்ளது.

    கடந்த பிப்ரவரி மாத இறுதியில் ரஷ்ய அரசு, உக்ரைன் மீது போர் அறிவித்து தொடர்ந்து ராணுவ தாக்குதல் நடத்திவருகிறது. அமெரிக்கா மற்றும் ஏனைய ஐரோப்பிய நாடுகளுடன் உக்ரைன் நெருக்கம் காட்டி நேட்டோ அமைப்பில் சேரப் போவதாக ரஷ்யா புகார் தெரிவித்து இந்த போரை தொடுத்துள்ளது.

    ரஷ்யாவின் இந்த போர் நடவடிக்கை ஐரோப்பிய நாடுகளில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீது கடும் பொருளாதார தடைகளை விதித்தன. ஐக்கிய நாடுகள் சபையில் ரஷ்யாவுக்கு எதிராக தீர்மானங்கள் கொண்டு வந்ததுடன், உக்ரைனுக்கு ஆதரவாக நிதி மற்றும் ஆயுத உதவிகளை வழங்கின. இந்த போரில் ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பாட்டை இந்தியா எடுக்கவில்லை. மாறாக இரு நாடுகளும் பேச்சு வார்த்தை மூலம் தீர்வை எட்ட வேண்டும் என வலியுறுத்தியது.

    இந்தியாவின் இந்த நிலைப்பாடு மேற்கு நாடுகளிடம் விமர்சனத்தை சந்தித்தது. அத்துடன் இந்தியா ரஷ்யாவிடம் எரிபொருள் வாங்கக்கூடாது என அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகள் அழுத்தம் தந்தன. ஆனால், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை தனித்துவமானது. இந்தியாவின்  கொள்கை மற்றும் இறையாண்மையில் தலையிட வேறு நாடுகளுக்கு உரிமை இல்லை என இந்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.

    அத்துடன் இந்தியாவை விட மேற்கு நாடுகள்தான் ரஷ்யாவிடம் அதிகளவில் எரிபொருள் இறக்குமதி செய்கின்றன. இந்தியா ஒரு மாதம் வாங்கும் அளவை அவர்கள் ஒரு நாளிலேயே வாங்குவார்கள் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விமர்சித்திருந்தார்.

    இதையும் படிங்க: மின் உற்பத்தியில் கார்பன் வெளியேற்றத்தை குறைக்க நியூயார்க் முன்னெடுக்கும் சூப்பர் திட்டம்..!!

    இந்நிலையில், உக்ரைன் போருக்குப் பின் ரஷ்யாவின் எரிபொருள் வியாபாரம் குறித்த புள்ளி விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, பல்வேறு பொருளாதார தடைகளுக்கு மத்தியிலும் ரஷ்யா சுமார் 68 பில்லியன் டாலருக்கு எரிபொருள்களை கப்பல் மற்றும் குழாய்கள் மூலம் விநியோகம் செய்துள்ளன. அதில் 71 சதவீதம் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இறக்குமதி செய்துள்ளன.

    குறிப்பாக, ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகள் அதிகளவிலான எரிபொருளை இறக்குமதி செய்துள்ளன. அத்துடன் இந்தியாவை விட அமெரிக்காவே இந்த காலகட்டத்தில் அதிக இறக்குமதியை ரஷ்யாவிடம் இருந்து மேற்கொண்டுள்ளது புள்ளி விவரத்தில் தெரியவந்துள்ளது. இதன் மூலம் இந்தியாவை இந்த விவகாரத்தில் விமர்சிக்கும் மேற்கு நாடுகளின் சந்தர்ப்பவாத செயல் வெளிப்பட்டுள்ளது.
    Published by:Kannan V
    First published:

    Tags: International, Russia - Ukraine

    அடுத்த செய்தி