ரஷ்ய மதகுரு கிரிலின் தடையை நீக்கியது ஐரோப்பிய ஒன்றியம்!
ரஷ்ய மதகுரு கிரிலின் தடையை நீக்கியது ஐரோப்பிய ஒன்றியம்!
Russian patriarch Kirill: ஐரோப்பிய ஒன்றிய தூதர்கள் வியாழக்கிழமை ரஷ்யாவின் ஆர்த்தடாக்ஸ் தேவாலயத்தின் தலைவரை முன்மொழியப்பட்ட தடுப்புப்பட்டியலில் இருந்து நீக்கினர்.
Russian patriarch Kirill: ஐரோப்பிய ஒன்றிய தூதர்கள் வியாழக்கிழமை ரஷ்யாவின் ஆர்த்தடாக்ஸ் தேவாலயத்தின் தலைவரை முன்மொழியப்பட்ட தடுப்புப்பட்டியலில் இருந்து நீக்கினர்.
ஐரோப்பிய ஒன்றியத் தூதர்கள் வியாழக்கிழமை ரஷ்யாவின் ஆர்த்தடாக்ஸ் தேவாலயத்தின் தலைவரை, முன்மொழியப்பட்ட தடைப்பட்டியலில் இருந்து நீக்கினர்.
"புதின் மற்றும் கிரெம்ளினுக்கு எதிராக மற்றொரு வலுவான பொருளாதார தடைகள் இன்று ஒப்புக் கொள்ளப்பட்டன.இது ரஷ்யாவின் போருக்கு நிதியளிக்கும் திறனைக் குறைக்கும்." என்று ஐரோப்பிய ஒன்றிய தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் ட்வீட் செய்துள்ளார்.
புடாபெஸ்ட்டில்(Budapest ) நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் கூட்டத்தில் , உக்ரைன் போர் மீதான புதிய பொருளாதாரத் தடைகல், பெரும்பாலான ரஷ்ய எண்ணெய் இறக்குமதிகள் மீதான தடை, மதகுரு கிரில் தடைப்பட்டியலிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன.
குழாய் வழியாக வரும் ரஷ்ய எண்ணெய்க்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற ஹங்கேரிய பிரதமர் விக்டர் ஓர்பனின் கோரிக்கைக்கு இணங்கி புதிய நடவடிக்கைகளில் உடன்பாடு ஏற்பட்டதாக ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் திங்களன்று அறிக்கை வெளியிட்டனர்.
ஆனால் ரஷ்ய தேவாலயத் தலைவரின் பெயரையும் அகற்ற வேண்டும் என்ற ஆர்பனின் பிடிவாதத்தால் மற்ற 26 நாடுகள் தங்கள் கோரிக்கைகளைக் குறைக்க வேண்டியிருந்தது.
‘மதச் சுதந்திரம்’
75 வயதான கிரில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினின் தீவிர ஆதரவாளர் மற்றும் உக்ரைனில் அவரது இராணுவ பிரச்சாரத்தை ஆதரித்துள்ளார்.
கிரெம்ளினுக்கு நெருக்கமான ஐரோப்பிய ஒன்றியத் தலைவரான ஆர்பன், கிரில்லை தடைப்பட்டியலில் சேர்ப்பதை எதிர்த்தார். அது "மத சுதந்திரத்திற்கு" எதிரானது என்றக் காரணத்தை முன்னிறுத்தினார்.
ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் கூறுகையில், புதிய பொருளாதாரத் தடைகள் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான ரஷ்ய எண்ணெய் ஏற்றுமதியில் 90 சதவீதத்தை இந்த ஆண்டு இறுதிக்குள் நிறுத்திக்கொள்ளும் என்று கூறுகின்றனர்.இதன் மூலம் ரஷ்சியாவிற்கு ஆயுதங்கள் தயாரிக்க கிடைக்கும் பணம் குறையும் என்று ஐரோப்பிய ஒன்றியம் நம்புகிறது.
ரஷ்ய பொருளாதாரத்தை உலுக்கிய ஐந்து முந்தைய தண்டனை தொகுப்பிற்குப் பிறகு, மாஸ்கோவிற்கு எதிராக இன்றுவரை எடுக்கப்பட்ட மிகவும் சக்திவாய்ந்த தடையாக இந்த நடவடிக்கை கருதப்படுகிறது.
இந்த தொகுப்பில் ரஷ்யாவின் மிகப்பெரிய வங்கியான Sberbank ஐ உலகளாவிய SWIFT கட்டண முறையிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளது மற்றும் மேலும் மூன்று ரஷ்ய அரசு ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பொருளாதாரத் தடைகள் இந்த வாரத்தின் பிற்பகுதியில் ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிகாரப்பூர்வ இதழில் வெளியிடப்படும் போது முறையாக ஏற்றுக்கொள்ளப்படும் .
Published by:Ilakkiya GP
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.