ஃபைசர் - பயோ என்டெக் நிறுவன கொரோனா தடுப்பூசிக்கு ஐரோப்பிய ஒன்றியம் பச்சைக் கொடி

ஃபைசர் - பயோ என்டெக் நிறுவன கொரோனா தடுப்பூசிக்கு ஐரோப்பிய ஒன்றியம் பச்சைக் கொடி

தடுப்பூசி- பிரதிநிதித்துவப் படம்

ஃபைசர்- பயோ என்டெக் நிறுவனம் தயாரித்த கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கு ஐரோப்பிய ஒன்றியம் ஒருவழியாக பச்சைக் கொடி காட்டியுள்ளது.

  • Share this:
ஃபைசர்- பயோ என்டெக் நிறுவனம் தயாரித்த கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கு ஐரோப்பிய ஒன்றியம் ஒருவழியாக பச்சைக் கொடி காட்டியுள்ளது.

கிறிஸ்துமஸ் தினத்துக்கு அடுத்த நாள் முதல் 27 நாடுகளில் இந்த தடுப்பூசி மக்களுக்கு அளிக்கப்படவிருக்கிறது. ஐரோப்பிய அரசுகள் கொடுத்த நெருக்கடியின் பேரில் ஐரோப்பிய ஒன்றியம் இந்த வாக்சினுக்கு அனுமதி அளித்துள்ளது.

இந்த வாக்சினை ஐரோப்பிய மெடிசின் ஏஜென்சி பரிந்துரைக்க ஐரோப்பிய ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இந்த புதிய வாக்சின் பிரிட்டனை உலுக்கி பீதியைக் கிளப்பி வரும் புதுவகை கொரோனா வைரஸுக்கு எதிராகவும் திறம்பட செயல்படும் என்று ஐரோப்பிய மெடிசின் ஏஜென்சி நம்பிக்கைத் தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய கமிஷன் தலைவர் உர்சுலா வோன் டெர் லேயன் ஏ.எஃப்.பி செய்தி நிறுவனத்துக்குக் கூறும்போது டிசம்பர் 27ம் தேதி முதல் ஐரோப்பிய நாடுகளில் இந்த தடுப்பூசி பயன்படுத்தப்படும், இந்த வாக்சின் உண்மையான ஐரோப்பிய வெற்றிப் பங்களிப்பு என்று பெருமிதம் பொங்கக் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறும்போது, “கடினமான இந்த ஆண்டை சுமுகமாக முடிக்க இது ஒரு சிறந்த தருணம். கடைசியாக கோவிட்-19க்கு எதிராக நாம் புதிய அத்தியாயம் ஏற்படுத்துவோம்” என்றார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த வாக்சின் பச்சைக் கொடி முடிவுக்கு ஸ்பெயின் ,இத்தாலி, ஜெர்மனி நாடுகள் கடும் உற்சாகத்துவன் வரவேற்பு அளித்துள்ளன.

நிபந்தனையின் அடிப்படையில் இந்த தடுப்பூசியை விற்பனை செய்ய ஓராண்டு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தடுப்பூசி மீதான சோதனைகள் தொடரும் என்று ஐரோப்பிய யூனியன் கூறியுள்ளது.

இந்த தடுப்பூசியை நோயாளிக்கு அளித்த பிறகு 15 நிமிடங்கள் நோயாளிகளை கண்காணிக்கவுள்ளனர், ஏனெனில் பிரிட்டனில் சிலருக்கு ஒவ்வாமை நோய் அறிகுறிகள் தோன்றியதாக புகார்கள் எழுந்ததே.

அமெரிக்காவின் மாடர்னா நிறுவனத்தின் இன்னொரு தடுப்பூசியை அனுமதிப்பது குறித்து ஐரோப்பிய யூனியன் ஜனவரி 6ம் தேதி முடிவெடுக்கவுள்ளது.
Published by:Muthukumar
First published: