எத்தியோப்பியாவில் விமான விபத்து: 157 பேர் பலி!

விமானம் புறப்பட்ட 6 நிமிடங்களில் ரேடாரில் இருந்து மறைந்து, தகவல் தொடர்பை இழந்தது.

எத்தியோப்பியாவில் விமான விபத்து: 157 பேர் பலி!
கோப்புப்படம்
  • News18
  • Last Updated: March 10, 2019, 6:33 PM IST
  • Share this:
எத்தியோப்பியா தலைநகர் அடிஸ் அபாபாவிலிருந்து 149 பயணிகள் 8 பணியாளர்களுடன் புறப்பட்ட விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் சென்ற அனைவரும் உயிரிழந்தனர் என்று எத்தியோப்பிய ஊடகத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

எத்தியோப்பியா தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து கென்யாவின் நைரோபியை நோக்கி போயிங் 737 விமானம் இன்று காலையில் புறப்பட்டது. விமானம் புறப்பட்ட 6 நிமிடங்களில் ரேடாரில் இருந்து மறைந்து, தகவல் தொடர்பை இழந்தது. தொடர்பை இழந்த சில நிமிடங்களில் விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.

விபத்து நேரிட்ட இடத்தில் தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் நடைபெற்றுவருகிறது’ என்று எத்தியோப்பியா ஏர்லைன்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. பின்னர், சில மணி நேரத்தில் விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்தனர் என்று எத்தியோப்பிய ஊடகத்தில் செய்தி வெளியானது.


உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எத்தியோப்பிய பிரதமர் அபி அஹமது இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவரையில் உயிரிழந்தவர்களின் பெயர் பட்டியல் அறிவிக்கப்படவில்லை.
First published: March 10, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்