எத்தியோப்பியா விமான விபத்தில் 4 இந்தியர்கள் பலி!

விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்தனர் என்று எத்தியோப்பியா ஊடகத்தில் செய்தி வெளியானது.

எத்தியோப்பியா விமான விபத்தில் 4 இந்தியர்கள் பலி!
எத்தியோப்பியா விமான விபத்து
  • News18
  • Last Updated: March 11, 2019, 4:23 PM IST
  • Share this:
எத்தியோப்பியா தலைநகர் அடிஸ் அபாபாவிலிருந்து 149 பயணிகள் 8 பணியாளர்களுடன் புறப்பட்ட விமானம் விபத்துக்குள்ளானது. இதில் 4 இந்தியர்கள் பலியானதாக அறிவித்துள்ளனர்.

எத்தியோப்பியா தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து கென்யாவின் நைரோபியை நோக்கி போயிங் 737 விமானம் இன்று காலையில் புறப்பட்டது.

விமானம் புறப்பட்ட 6 நிமிடங்களில் ரேடாரில் இருந்து மறைந்து, தகவல் தொடர்பை இழந்தது. தொடர்பை இழந்த சில நிமிடங்களில் விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.


விபத்து நேரிட்ட இடத்தில் தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் நடைபெற்றுவருகிறது’ என்று எத்தியோப்பியா ஏர்லைன்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. பின்னர், சில மணி நேரத்தில் விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்தனர் என்று எத்தியோப்பியா ஊடகத்தில் செய்தி வெளியானது.

எத்தியோப்பியா விமான விபத்து


இந்த விமான விபத்தில் 32 நாடுகளைச் சேர்ந்தவர்கள் பயணித்துள்ளனர்.அதில் கென்யாவைச் சேர்ந்த 32 பயணிகளும், கனடாவைச் சேர்ந்த 18 பயணிகளும், சீனாவைச் சேர்ந்த 8 பயணிகளும், இத்தாலியைச் சேர்ந்த 8 நபர்களும், இங்கிலாந்தைச் சேர்ந்த 7 பயணிகளும், அமெரிக்காவைச் சேர்ந்த 8 பயணிகளும், எகிப்தைச் சேர்ந்த 6 பயணிகளும், நெதர்லாந்தைச் சேர்ந்த 5 பயணிகளும், இந்தியாவைச் சேர்ந்த 4 பயணிகளும் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எத்தியோப்பியா பிரதமர் அபி அஹமது மற்றும் பிற உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மேலும் பார்க்க:
First published: March 11, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்