இங்கிலாந்தில் பெரிய மார்பக்கத்தால் அவதிப்படும் இளம்பெண் ஒருவர் தனது மார்பக அறுவை சிகிச்சைக்காக மக்களிடம் நிதி உதவி கோரியுள்ளார்.
இயைற்கையாகவே மனித உடல் அமைப்பு என்பது தனித்துவமானது. ஒவ்வொரு மனிதரின் உடலும் மற்றொரு மனிதனிலிருந்து பல வழிகளில் மாறுபட்டதாக இருக்கும். இதில் பலர் தங்களது உடல் அமைப்பில் மகிழ்ச்சி கொள்கின்றனர். ஆனால், ஒரு சிலர் தங்கள் உடல் அமைப்பை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிக்கின்றனர். இதற்கு காரணமாக இருப்பது பெரும்பாலும் உடல் தோற்றத்தை அடையாளமாக மாற்றி கேலி, கிண்டல் செய்வதாலேயே இருக்கும்.
அந்தவகையில், இங்கிலாந்தைச் சேர்ந்த கார்லி ஸ்மார்ட் (21), என்ற பெண் தனது பெரிய மார்பகங்களால் பல இன்னல்களுக்கு ஆளாகி வந்துள்ளார். அதன் காரணமாக தனது மார்பகத்தை சிறியதாக மாற்ற அறுவை சிகிச்சை செய்ய அவர் முடிவு செய்துள்ளார்.
இங்கிலாந்தின் நார்தாம்ப்டன்ஷையரில் (Northamptonshire, England) வசித்து வருபவர் கார்லி ஸ்மார்ட் (21), உணவு விடுதியில் பணிபுரிந்து வருகிறார். சமீப காலமாக இங்கிலாந்தில் கார்லியின் பிரச்சினை விவாதமாக மாறியுள்ளது. அதாவது, கார்லி தனது சிறு வயது முதலே பெரிய மார்பகங்களை கொண்டுள்ளார். அது, கார்லி தனது 17 வயதை அடைந்தவுடன் தொடர்ந்து, அவரது மார்பகத்தின் அளவு வேகமாக அதிகரிக்கத் தொடங்கியது.
இதற்காக மார்பக அறுவை சிகிச்சை செய்ய கார்லி முயன்றுள்ளார். அதற்கு மருத்துவ செலவு அதிகமாகவே, பொதுமக்களிடம் நிதி திரட்ட நினைத்து அதற்கான முயற்சியில் தற்போது ஈடுபட்டுள்ளார். கார்லியின் வயது, உயரம் மற்றும் எடையுடன் ஒப்பிடுகையில் அவரது மார்பக அளவானது மிகப்பெரியதாக இருக்கிறது. அவரது மார்பக எடை மட்டும் 9 கிலோவாக இருக்கிறது. தனது பெரிய மார்பகங்களால் கார்லி மூச்சுத் திணறல் ஏற்படுவது போன்று உணர்வதாக கூறுகிறார்.
இதனிடையே, கார்லியின் மார்பகத்தை வைத்து அவர் பணிபுரியும் உணவகத்தில் அவர் பல கேலி மற்றும் கிண்டல்களை சந்தித்து வருகிறார். மார்பகத்தால் உணவகத்தின் கண்ணாடிகளை உடைத்துவிடாதே என்று சக ஊழியர்கள் கார்லியை கேலி செய்து வந்துள்ளனர். இது ஒருபுறம் இருக்க, வாடிக்கையாளர்களர்களுக்கு உணவு பரிமாறும் போது பல சமயங்களில் அவரது மார்பில் அடிபட்டுள்ளது. ஒரு சமயம் வெந்நீர் சிந்தி அவரது மார்புகளில் காயமும் ஏற்பட்டுள்ளது. இதனால், வாடிக்கையாளர்கள் முன்னாள் அவர் பலமுறை அவமானப்பட்டுள்ளார்.
இதையும் படியுங்கள் : கரடி நிற்கும் தடுப்பு வேலிக்குள் 3 வயது குழந்தையை வீசிய தாய் - அடுத்து நடந்தது என்ன?
ஒரு கட்டத்தில் நடந்த சம்பங்கள் அனைத்தையும் மருத்துவரிடம் சென்று விளக்கினேன், அருவருப்பான விஷயம் என்னவென்றால், அவர் என்னிடம் திரும்பி, ' மன அழுத்த எதிர்ப்பு மருந்துகளை தருகிறோம். எனவே நீங்கள் அதைப் பற்றி அதிகம் சிந்திக்க வேண்டியதில்லை என்று மருத்துவர் கூறினார் .
நான் ஏன் மன அழுத்த எதிர்ப்பு மருந்துகளை அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும்? அதனால் நான் என் மார்பைப் பற்றி அதிகம் நினைக்காமல் இருந்துவிடுவேனா? நான் கேட்டதிலேயே மிகவும் அபத்தமான வார்த்தை அது தான். எனக்கு இங்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை என்று நான் உடைந்துபோன புள்ளி அது என்று கார்லி கூறுகிறார்.
இத்தகைய சிரமங்களை தாண்டி, அவரது மார்பக எடையால் கார்லிக்கு முதுகுவலி பிரச்சினைகளும் ஏற்பட்டுள்ளது. மேலும், ப்ரா அணிவதால் கார்லியின் மார்பகத்தின் கீழ் உராய்வு காரணமாக தோள் தடிப்புகளும் ஏற்படுகின்றன. இத்தனை பிரச்சனைகளிலிருந்தும் விடுபட முடியாமல் தவித்து வரும் கார்லி தற்போது, கிரவுட் ஃபண்டிங் முறையில் பொது மக்களிடம் இருந்து பணம் திரட்டி மார்பக அறுவை சிகிச்சை செய்ய முயற்சித்து வருகிறார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.