ட்ரம்பைக் கண்டுகொள்ளாத இங்கிலாந்து இளவரசி; கண்ணால் பேசிய இரண்டாம் எலிசபெத்! வைரலாகும் வீடியோ

ட்ரம்பைக் கண்டுகொள்ளாத இங்கிலாந்து இளவரசி; கண்ணால் பேசிய இரண்டாம் எலிசபெத்! வைரலாகும் வீடியோ
ட்ரம்ப்
  • News18
  • Last Updated: December 4, 2019, 6:21 PM IST
  • Share this:
இங்கிலாந்து அரசி இரண்டாம் எலிசபெத் வழங்கிய விருந்தில் பங்கேற்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை இளவரசி அனி வரவேற்காமல் சாதரணமாக இருந்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

இங்கிலாந்து அரசி இரண்டாம் எலிசபெத் நேட்டோ நாட்டுத் தலைவர்களுக்கு விருந்து வைத்தார். நேற்று இரவு லண்டனிலுள்ள பங்கிங்காம் பேலஸில் வைத்து இந்த விருந்து நடைபெற்றது. அந்த விருந்தில் பங்கேற்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பையும், அவரது மனைவி மெலானியா ட்ரம்பையும் அரசி எலிசபெத்தும் இளவரசர்கள் சார்லஸ், கமிலா ஆகியோர் கை குலுக்கி வரவேற்றனர்.

அப்போது இரண்டாம் எலிசபெத்தின் ஒரே மகளான இளவரசி அனி சிறிது தூரத்தில் இருந்தார். எலிசபெத்தும் அனியும்(Anne)அமைதியாக முகபாவனைகள் மூலம் ஏதோ பேசிக் கொள்கின்றனர். இளவரசி அனி(Anne)ட்ரம்பையும் அவரது மனைவி மெலானியா ட்ரம்பையும் கண்டுகொள்ளவேயில்லை. அந்த வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

Also see:


 
First published: December 4, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்