வணக்கம் கூறி தமிழ் மக்களுக்கு பொங்கல் வாழ்த்து சொன்ன இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்

போரிஸ் ஜான்சன்

நீங்கள் வைக்கும் பொங்கலில் இருந்து மகிழ்ச்சி, உற்சாகம், செழுமை ஆகிய பொங்கி வரட்டும் என்று இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

 • Share this:
  உலகம் முழுவதும் பரவி வாழும் தமிழர்கள் தமிழர் திருநாளாம் பொங்கலை சிறப்பாக கொண்டாடிவருகின்றனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத் தலைவர்களைக் கடந்து பிரதமர் மோடி, ராகுல் காந்தி உள்ளிட்ட தேசியத் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.

  அதன் தொடர்ச்சியாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பொங்கல் வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ பதிவில், ‘வணக்கம்.. பிரிட்டனில் வாழும் தமிழ் மக்கள் அனைவருக்கும் தைப் பொங்கல் வாழ்த்துகள். இன்றைய தினத்தை பொங்கல் வைத்து இயற்கைக்கு நன்றி சொல்லும் திருநாளாக கொண்டாடுகிறீர்கள். நானும் உங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கொரோனா காலத்தில் உங்களின் ஒத்துழைப்பிற்காக. ஏனெனில் இந்த இக்கட்டான சூழலில் அனைவரது கடின உழைப்பும், தீவிரமான கட்டுப்பாடுகளும் மிகுந்த நன்மையை ஏற்படுத்தி வருகின்றன.

  தேசிய மருத்துவச் சேவையில் முன்களப் பணியாளர்களாக பணியாற்றி தியாகம் செய்ததில் தமிழ் மக்களின் பங்கு முக்கியமானது. அனைவரும் நம்பிக்கையுடன் இருங்கள். இந்த அற்புதமான பண்டிகையில் தங்களைப் புதுப்பித்துக் கொண்டு நம்பிக்கையுடன் நடைபோடுங்கள். ஒவ்வொரு நாளும் ஏராளமானோருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதன்மூலம் பலரும் கொரோனாவில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் நிலையை அடைந்து கொண்டிருக்கின்றனர்.

  எனவே தற்போதைய மோசமான காலகட்டத்தில் இருந்து மீண்டு புதிய தொடக்கத்திற்கு வித்திடுவோம். இதையொட்டி இங்கிலாந்தில் உள்ள தமிழர்கள் மற்றும் உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: