கொரோனா தொற்று ஏற்பட்ட இங்கிலாந்து பிரதமருடைய காதலி ட்வீட்!

தன் காதலியுடன் பிரதமர் போரிஸ் ஜான்சன்.

கர்ப்பமாக இருக்கும்போது கொரோனா பாதிப்பு என்பது தன்னை கவலைக்கு உள்ளாக்குவதாக கேரி பதிவிட்டிருந்தார்.

 • Share this:
  இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் அவரது வருங்கால மனைவி கேரி சைமண்ட்ஸ், தானே முன்வந்து தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

  ஒரு வார கால ஓய்விற்குப் பின் தற்போது நலமுடன் இருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் கேரி பதிவிட்டுள்ளார். கர்ப்பமாக இருக்கும்போது கொரோனா பாதிப்பு என்பது தன்னை கவலைக்கு உள்ளாக்குவதாகவும், கர்ப்பிணிகள் கொரோனா தாக்குதலின்போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்தும் ஏற்கனவே பதிவிட்டிருந்தார் கேரி.

  கடந்த ஆண்டு இறுதியில் போரிஸ் மற்றும் கேரிக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில் விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்திருந்தனர். இதன் மூலம் கடந்த 200 ஆண்டுகளில் பதவியில் இருக்கும்போது திருமணம் செய்து கொள்ளும் முதல் இங்கிலாந்து பிரதமராவார் போரிஸ் ஜான்ஸன்.

  Also see:
  Published by:Rizwan
  First published: