Video | பயணிகளை அந்தரத்தில் தொங்கவிட்ட ரோலர் கோஸ்டர்... பதைபதைக்க வைக்கும் வீடியோ..!

100 அடி உயரத்தில் 20 நிமிடங்கள் அந்தரத்திலேயே தொங்கியுள்ளனர்.

news18
Updated: July 25, 2019, 1:14 PM IST
Video | பயணிகளை அந்தரத்தில் தொங்கவிட்ட ரோலர் கோஸ்டர்... பதைபதைக்க வைக்கும் வீடியோ..!
ரோலர் கோஸ்டர்
news18
Updated: July 25, 2019, 1:14 PM IST
பயம் , ஆபத்து என்று தெரிந்தே இறங்கும் களம்தான் சாகச விளையாட்டுகள். பயம் இருந்தாலும் அதை ஒருமுறையேனும் விளையாட மனம் தூண்டும். தப்பித்தால் அதிர்ஷ்டம். சிக்கிக் கொண்டால்...

சாகசத்திற்கு ஆசைப்பட்டு அப்படித்தான் சிக்கிக் கொண்டனர் இங்கிலாந்து வாசிகள்.. இங்கிலாந்தின் ஆல்டொன் டவர், ஸ்மைலர் விளையாட்டுத் திடல் ரோலர் கோஸ்டரில் பயணித்தபோது திடீரென தடம் புரண்டு அந்தரத்தில் அதாவது 100 அடி உயரத்தில் தொங்கியது. கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் அந்தரத்திலேயே தொங்கியுள்ளனர்.




இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்தக் காயங்களுமின்றி காப்பாற்றப்பட்டனர். அதில் சிக்கிக் கொண்ட ஒருவர் காப்பாற்றியபின் மீடியாவிற்கு அளித்த பேட்டியில் “நாங்கள் நண்பர்களுடன் அதில் பயணித்தோம். அது மேலிருந்து தரைத் தளத்தை நோக்கி இறங்கப்போகும் நேரத்தில் நின்று விட்டது. பயமுறுத்த நிறுத்தியுள்ளனர் என்று நினைத்தோம். நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்த பின்புதான் தெரிந்தது அது கோளாறு காரணமாக நின்றுள்ளது என்று.. பின்புதான் அனைவரும் பயத்தில் கூச்சலிடத் துவங்கினர்” என்று கூறியுள்ளனர்.

பின் அந்த விளையாட்டுத் திடலின் உரிமையாளரும் தவறு நடந்ததற்கு மன்னிப்பு கோரி; இதுபோன்ற சம்பவங்கள் இனி நேரிடாமல் பார்த்துக் கொள்கிறோம் என்றும் கூறியுள்ளனர்.
First published: July 25, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...