உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்தவர் 28 வயது சுபம் கர்க். இவர் சென்னை ஐஐடியில் பிடெக் பட்டம் முடித்தவர். சுபம் கர்க் சமீபத்தில் ஆஸ்திரேலியா நாட்டிற்கு மேற்படிப்புக்காக சென்றுள்ளார். அங்குள்ள நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் மெக்கனிக்கல் இன்ஜினியரிங் துறையில் முனைவர் பட்டத்திற்கு படித்துவந்துள்ளார்.
சிட்னியில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து வசித்துவந்த சுபம் கடந்த ஆறாம் தேதி அன்று நண்பர்களுடன் வழக்கம் போல் கல்லூரிக்கு சென்றுள்ளார். அப்போது சுபமிற்கு எதிரே ஒரு நபர் வந்து கத்தியால் குத்தியுள்ளார். அத்துடன் நிற்காமல் சுபமை இறுக பிடித்து தனது கையில் வைத்திருந்த கத்தியால் சுபத்தின் முகம், தலை, கழுத்து, இதயம் என அனைத்து பகுதிகளிலும் சரமாரியாக கத்தியால் குத்தி தப்பியோடியுள்ளார். கண் இமைக்கும் நேரத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. சுற்றி இருந்த நண்பர்கள் என்ன நடக்கிறது என்பதை உணர்வதற்குள் இந்த கொடூர தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது.
ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சுபத்தை நண்பர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மிக ஆபத்தான நிலையில் சுபம் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடலில் 11 இடங்களில் கத்தியால் குத்தப்பட்டுள்ளதாக மருத்துவ அறிக்கை தெரிவிக்கிறது. முன்பின் தெரியாத மர்ம நபர் இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளதால் இந்தியர் மீதான இனவெறியில் தான் இந்த தாக்குதல் நடைபெற்றதாக முதல் கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. சிசிடிவி காட்சிகள் கொண்டு தாக்குதல் நடத்திய நபரை காவல்துறை தேடி வருகிறது. இந்நிலையில், உயிருக்கு போராடி வரும் சுபத்தை பார்க்க அவரது பெற்றோர் விசாவுக்காக போராடி வருகின்றனர். தங்களுக்கு இந்திய அரசு உதவி செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
இதையும் படிங்க: பாகிஸ்தானில் 2 மணிநேரத்திற்கு ஒரு பெண் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகிறார்.. அதிர்ச்சி தரும் ஆய்வு தகவல்
அன்மை காலமாகவே வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் மீது இனரீதியான தாக்குதல்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் இது போன்ற சம்பவங்கள் பதிவான நிலையில், ஆஸ்திரேலியாவில் ஒரு மாணவர் இனவெறி தாக்குதலால் உயிருக்கு போராடி வருகிறார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Attack, Engineering, Sydney