ஹோம் /நியூஸ் /உலகம் /

தாலிபான்களுக்கு சிம்மசொப்பனமாக திகழும் பஞ்ஷிர் நாயகன் சரண் அடைகிறாரா?

தாலிபான்களுக்கு சிம்மசொப்பனமாக திகழும் பஞ்ஷிர் நாயகன் சரண் அடைகிறாரா?

ahmed masood

ahmed masood

தாலிபான்கள் , சோவியத் படைகள் என யவராலும் வெல்ல முடியாத கோட்டையாக பஞ்ஷிர் பள்ளத்தாக்கு உள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

ஆப்கானிஸ்தான் மக்களுக்கு கடைசி நம்பிக்கையாக திகழும் பஞ்ஷிர் பள்ளத்தாக்கின் நாயகன் அகமது மசூத் தாலிபான்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி வரும் நிலையில் அவர் சரணடைய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் அது உண்மையா, இது குறித்து பஞ்ஷிர் மாகாணவாசிகள் கூறுவது என்ன?

ஆப்கானிஸ்தானில் அரசுப் படைகள் வீழ்ச்சியை சந்தித்த நிலையில் ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தானின் கட்டுப்பாடும் தாலிபான்கள் கைக்கு சென்றுவிட்டன. அவர்கள் அமெரிக்க படைகளின் முழுமையான வெளியேற்றத்துக்கு பிறகு ஆப்கனில் புதிய ஆட்சியை அமைப்பது குறித்து காபுலில் முன்னாள் அதிபர் ஹமீத் கர்சாய் உள்ளிட்டோர் தாலிபான்களுடன் பல கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆப்கானிஸ்தானின் 34 மாகாணங்களும் தாலிபான்கள் கட்டுக்குள் இருப்பதாக சொல்லப்பட்ட நிலையில் பஞ்ஷிர் எனும் மாகாணத்தை மட்டும் மக்கள் எழுச்சியாக மீண்டும் தாலிபான்களிடம் இருந்து கைப்பற்றி அவர்களை ஓட விட்டுள்ளனர்.

Also Read: சென்னையில் லேசான நில நடுக்கம்- பொதுமக்கள் அதிர்ச்சி!

இந்த எழுச்சிக்கு காரணமாக இருப்பவர் அந்த பள்ளத்தாக்கின் ஹீரோவாக விளங்கும் அகமது மசூத் என்ற இளைஞர். இவருடைய உத்வேகத்தின் மூலம் மக்கள் திரட்டப்பட்டு தாலிபான்களுக்கு எதிராக போராடி இழந்த மாகாணத்தை மீட்டுள்ளனர். இது குறித்து அகமது மசூத் கூறுகையில் ஆப்கானிஸ்தானில் இன்னும் போர் முடியவில்லை நாங்கள் பஞ்ஷிர்காரர்கள் ஆப்கன் சுதந்திர போராட்டத்தை முன்னின்று நடத்துவோம் என சூளுரைத்தார்.

பஞ்ஷிரின் எழுச்சியை பார்த்து அருகாமையில் உள்ள மாகாணத்திலும் தாலிபான்களுக்கு எதிரான சண்டைகள் நடந்து கொண்டிருக்கிறது.

Also Read:   Gallery:மாஸ்டரை பின்னுக்குத்தள்ளிய வலிமை.. ட்விட்டர் இந்திய ட்ரெண்டிங்கில் முந்திய அஜித்!

தாலிபான்கள் மட்டுமல்ல சோவியத் யூனியன் படையெடுப்பின் போதும் கூட இந்த பஞ்ஷிர் பள்ளத்தாக்கை யாராலும் கைப்பற்ற முடியாத பெருமையுடன் இருந்து வருகிறது. அகமது மசூத்தின் தந்தை அஹ்மது ஷா இஸ்லாமிய அடிப்படைவாதம் மற்றும் தாலிபான்களுக்கு எதிரானவர், இவரை தாலிபான்கள் கொலை செய்தனர். தற்போது தாலிபான்களுக்கு எதிரான சண்டையை அவரின் தந்தை பாணியில் அகமது மசூத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் அஹ்மது மசூத், தாலிபான்களிடன் சரணடைய இருப்பதாக பிரபல ஆங்கில செய்தி நிறுவனமான The Telegraph செய்தி வெளியிட்டுள்ளது. தாலிபான்கள் , சோவியத் படைகள் என யவராலும் வெல்ல முடியாத கோட்டையாக பஞ்ஷிர் பள்ளத்தாக்கு உள்ளது. இதுபோன்ற சூழலில் அஹ்மது மசூத் சரணடைவதாக வெளியாகியிருக்கும் தகவல் ஆப்கன் மக்களிடையே கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதே நேரத்தின் சரணடையும் பேச்சுக்கே இடமில்லை, நாங்கள் எங்கள் உயிர்களை தியாகம் செய்வோம், ஆனால் நாங்கள் எங்கள் நிலத்தையும் எங்கள் மரியாதையையும் தியாகம் செய்யமாட்டோம் என அகமது மசூத் கூறியிருப்பதாக பஞ்ஷிர் மாகாண ட்விட்டர் பக்கத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

Published by:Arun
First published:

Tags: Afghanistan, Taliban