பிபிஇ உடைகளை மறுவிற்பனை செய்ய முயற்சி: மத்திய பிரதேசத்தில் சர்ச்சை!

சலவையில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள்

”பிபிஇ உடையை  துண்டு துண்டாக வெட்டுவதற்கு பதிலாக சலைவை செய்யும்படி நிர்வாகம் எங்களிடம் கூறியது.  வெந்நீர் வைரஸை கொன்றுவிடும் என்று அவர்கள் எங்களிடம் கூறினர்” என்று ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

 • Share this:
  மத்திய பிரதேசத்தில் மறு விற்பனைக்காக பிபிஇ உடைகளை ஊழியர்கள் சலவை செய்யும் வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

  கொரோனா 2வது அலையை எதிர்த்து இந்தியா தீவிரமாக செயலாற்றி வருகிறது. மத்திய, மாநில அரசுகள் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.  இந்நிலையில், கொரோனா வார்டில் பணியாற்றும் மருத்துவர்கள், செலிலியர், கொரோனா நோயாளிகள் ஆகியோர் அணியும் பிபிஇ உடையை மறுவிற்பனை செய்ய முயன்ற சம்பவம் மத்திய பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.

  பிபிஇ உடையை ஒருமுறை மட்டுமே பயன்படுத்திவிட்டு அப்புறப்படுத்திவிட வேண்டும். ஆனால், மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த மருத்துவ கழிவுகளை அகற்றும் நிறுவன ஊழியர்கள் சிலர் மறுவிற்பனை செய்வதற்காக பிபிஇ உடையை சலவை செய்யும் வீடியோ சமூக ஊடகத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  இந்த வீடியோவில் சலவை செய்து விற்பனைக்காக ஏராளமான பிபிஇ உடைகள் தயாராக இருப்பதும் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த சம்பவம் தொடர்பான விசாரணைக்கு உள்ளூர் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

  இதையும் படிங்க.. பால் வாக்கர் சாகசம் செய்து அசத்திய கார் ஏலத்துக்கு வருகிறது..

  இது தொடர்பாக  என்.டி.டி.வி. ஊடகத்துக்கு பேட்டியளித்த துணை வட்டாட்சியர்  சத்னா ராஜேஷ் சாஹி, “ சம்பவம் நடந்ததாக கூறப்படும் மருத்துவ கழிவுகளைஅகற்றும் நிறுவனத்துக்கு மாநில மாசு கட்டுப்பாட்டுவாரிய அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்” என தெரிவித்துள்ளார்.  மருத்துவ கழிவு அகற்றும் நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர் ஒருவர் இந்துஸ்தான் டைம்ஸ் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், “ பிபிஇ உடையை  துண்டு துண்டாக வெட்டுவதற்கு பதிலாக  சலவை செய்யும்படி நிர்வாகம் எங்களிடம் கூறியது.  வெந்நீர் வைரஸை கொன்றுவிடும் என்று அவர்கள் எங்களிடம் கூறினர். ஒருநாளைக்கு 1000 பிபிஇ உடைகள் அழிப்பதற்காக இங்கு வருகின்றன. அவற்றை மறு விற்பனை செய்வது மூலம் நிர்வாகம் எவ்வளவு லாபம் ஈட்டுகிறது என்பது எங்களுக்கு தெரியாது” என்று கூறியுள்ளார்.

  மேலும் படிக்க.. இந்தியாவில் 3 வாரங்களில் பாதியாக குறைந்த கொரோனா தினசரி பாதிப்பு...  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Murugesh M
  First published: