115 நாட்கள் கொரோனா வைரஸ் பாதிப்புடன் போராடி, கோமா நிலைக்கு சென்று மீண்டு வந்த ஜேனிஸ் காக்ஃபீல்ட் என்னும் டெல்டா ஏர்லைன்ஸ் பணியாளருக்கு, உலகின் எந்த மூலைக்கு வேண்டுமானாலும், முதல் வகுப்பு வான்வழிப் பயணத்தை இலவசமாக மேற்கொள்ளலாம் என்னும் பரிசை கொடுத்து சர்ப்ரைஸ் தந்திருக்கிரது டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனம்.
ஜேனிஸ் காக்ஃபீல்டின் சகோதரியான ஜேனெஸ் காக்ஃபீல்ட் தன் சகோதரி, 965 கிலோமோட்டருக்கு அப்பால் கொரோனா பாதித்து கோமா நிலையில் பரிதவிப்பதை எண்ணி வருந்தியிருக்கிறார். தற்போது குணமடைந்த ஜேனிஸ் தன் சகோதரியை பார்க்கச் செல்லவிருக்கிறார்.
டெல்டா ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ள அறிக்கையில், “ஜேனிஸ் கொரோனா வைரஸால் பாதிக்கப்படு கோமா நிலையில் இருந்தபோதும், அவரை எங்கள் பிரார்த்தனையில் வைத்திருந்தோம். ஜேனிஸ் நீங்கள் ஒரு ஆச்சரியம். உங்களை நினைத்து நாங்கள் பெருமைப்படுகிறோம்” என்று தெரிவித்துள்ளது.