தீவிபத்தில் சேதமடைந்த நாத்ரே டேம் தேவாலயம் அடுத்த ஐந்தாண்டுக்குள் சரிசெய்யப்படும்- அதிபர் உறுதி!

“பிரான்ஸ் நாடு நகரங்களுக்கும் துறைமுகங்களுக்கும் தேவாலயங்களுக்கும் பெயர் பெற்ற நாடாகும்”.

Web Desk | news18
Updated: April 17, 2019, 6:49 PM IST
தீவிபத்தில் சேதமடைந்த நாத்ரே டேம் தேவாலயம் அடுத்த ஐந்தாண்டுக்குள் சரிசெய்யப்படும்- அதிபர் உறுதி!
நாத்ரே டேம் தேவாலயம் (Image: Reuters)
Web Desk | news18
Updated: April 17, 2019, 6:49 PM IST
பழமையான நாத்ரே டேம் தேவாலயத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் சரி செய்வோம் என பிரான்ஸ் நாட்டின் அதிபர் இமானுவேல் மேக்ரன் உறுதி தெரிவித்துள்ளார்.

உலகின் மிகவும் பழமையான தேவாலயமாகக் கருதப்படும் நாத்ரே டேம் தேவாலயம் 850 ஆண்டுகால வரலாறை தன்னகத்தே கொண்டுள்ளது. நேற்று நடந்த பெரும் தீ விபத்தில் அந்த தேவாலயம் மிகக் கடுமையான சேதாரத்தை சந்தித்துள்ளது.

இதுகுறித்து பிரான்ஸ் நாட்டின் பிரதமர் இமானுவேல் மேக்ரன் கூறுகையில், “தேவாலயத்தின் அழகுக்கு அழகு சேர்க்கும் வகையில் செப்பனிடும் பணிகள் சிறப்பாகவே நடைபெறும். அடுத்து ஐந்து ஆண்டுகளுக்குள் இப்பணிகள் முழுவதுமாக நிறைவுபெறும். நம்மால் முடியும்” என உறுதியுடன் தெரிவித்தார்.


மேலும் மேக்ரான் கூறுகையில், “பிரான்ஸ் நாடு நகரங்களுக்கும் துறைமுகங்களுக்கும் தேவாலயங்களுக்கும் பெயர் பெற்ற நாடாகும். நமது ஒற்றுமையை இத்தகைய சூழலில் வெளிப்படுத்துவோம். நமது வரலாறு என்று குறையாது” எனத் தெரிவித்தார்.

மேலும் பார்க்க: 1345-ம் ஆண்டில் கட்டப்பட்ட பிரான்ஸ் நாட்ரே டேம் தேவாலயத்தில் பயங்கர தீ விபத்து...!


Loading...
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 17, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...