Home /News /international /

ஏப்.1ம் தேதி முதல் துபாயில் இருந்து இந்தியாவுக்கு விமான சேவை அதிகரிப்பு!

ஏப்.1ம் தேதி முதல் துபாயில் இருந்து இந்தியாவுக்கு விமான சேவை அதிகரிப்பு!

இதில் சென்னை நகரத்துக்கு மட்டும் வாரத்துக்கு 21 விமானங்கள் இயக்கப்படும். இதன் மூலம் சென்னை நகரத்துக்கு எமிரேட்ஸ் விமானம் தினமும் 3 விமானங்களை மீண்டும் வழக்கம் போல் இயக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் சென்னை நகரத்துக்கு மட்டும் வாரத்துக்கு 21 விமானங்கள் இயக்கப்படும். இதன் மூலம் சென்னை நகரத்துக்கு எமிரேட்ஸ் விமானம் தினமும் 3 விமானங்களை மீண்டும் வழக்கம் போல் இயக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் சென்னை நகரத்துக்கு மட்டும் வாரத்துக்கு 21 விமானங்கள் இயக்கப்படும். இதன் மூலம் சென்னை நகரத்துக்கு எமிரேட்ஸ் விமானம் தினமும் 3 விமானங்களை மீண்டும் வழக்கம் போல் இயக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஏப்.1ம் தேதி முதல் துபாயில் இருந்து இந்தியாவுக்கு இயக்கப்படும் விமான சேவையின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுகிறது.

    கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவில் கொரோனா தொற்று பரவத் தொடங்கியது. அதற்கு அடுத்த ஆண்டின் துவக்கத்தில் கொரோனா தொற்று உலகம் முழுவதும் வேகமாக பரவி பெரும் பாதிப்புக்குள்ளாக்கியது. இதன் காரணமாக இந்தியாவிலும் கொரோனா பெருந்தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் 23-ம் தேதி முதல் நாடு முழுவதும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது.

    இதனால், அனைத்து விமானப் போக்குவரத்து சேவைகளும் நிறுத்திவைக்கப்பட்டன. எட்டு மாதங்கள் வரையில் நீடித்த இந்த பொதுமுடக்கத்தைத் தொடர்ந்தது, அதன் பின்னர் உள்நாட்டு விமான சேவைகளுக்கு மட்டும் மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது.

    கொரோனா தொற்று, இரண்டாம் அலை, மூன்றாம் அலை, ஒமைக்ரான் பரவல் என அதிகரித்து கொண்டே சென்றது. தற்போது படிப்படியாக குறையத் துவங்கியுள்ளது. இதைத்தொடர்ந்து, நாளை முதல் சர்வதேச விமான போக்குரவத்தை தொடங்குவதாக மத்திய அரசு அறிவித்திருந்தது.

    இந்நிலையில், ஏப்.1ம் தேதி முதல் துபாயில் இருந்து இந்தியாவுக்கு இயக்கப்படும் விமான சேவையின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுகிறது.

    இது குறித்து எமிரேட்ஸ் விமான நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, துபாயில் இருந்து சென்னை, திருவனந்தபுரம், மும்பை, டெல்லி, பெங்களூரு, ஐதராபாத், கொச்சி, கொல்கத்தா மற்றும் ஆமதாபாத் உள்ளிட்ட 9 நகரங்களுக்கு எமிரேட்ஸ் விமான நிறுவனம் தனது நேரடி விமான சேவையை இயக்கி வருகிறது. கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக விமான போக்குவரத்து குறைவாக இயக்கப்பட்டன.

    தற்போது அமீரகம், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால், விமான சேவை முன்பு இருந்தது போல் இயல்பான நிலையில் இயக்கப்படும். இதன் மூலம் துபாயில் இருந்து 9 இந்திய நகரங்களுக்கு வாரத்துக்கு 170 விமானங்கள் இயக்கப்படும். இந்த சேவைகள் அனைத்தும் வரும் 1ம் தேதி முதல் தொடங்கும்.

    இதையும் படிங்க - உக்ரைன்- ரஷ்யா போர்: ஐ.நா பொதுசபையில் மீண்டும் நடந்த வாக்கெடுப்பு.. புறக்கணித்த இந்தியா!

    இதில் சென்னை நகரத்துக்கு மட்டும் வாரத்துக்கு 21 விமானங்கள் இயக்கப்படும். இதன் மூலம் சென்னை நகரத்துக்கு எமிரேட்ஸ் விமானம் தினமும் 3 விமானங்களை மீண்டும் வழக்கம் போல் இயக்கும். மும்பைக்கு 35 விமானங்களும், டெல்லிக்கு 28 விமானங்களும், பெங்களூருவுக்கு 24 விமானங்களும், ஐதராபாத்துக்கு 21 விமானங்களும், கொச்சிக்கு 14 விமானங்களும், கொல்கத்தாவுக்கு 11 விமானங்களும், ஆமதாபாத்துக்கு 9 விமானங்களும், திருவனந்தபுரத்துக்கு 7 விமானங்களும் வாரம் ஒன்றுக்கு இயக்கப்படும்.

    பயணிகள் தங்களின் விருப்பத்துக்கு ஏற்ப பயணம் செய்யும் வகையில் முன்பதிவு செய்யும் முறையிலும் சலுகை வழங்கப்பட்டுள்ளது. துபாயிலிருந்து மும்பை நகருக்கு ஏ380 விமானம் இந்த மாதம் முதல் தினசரி இயக்கப்படுகிறது. அதேபோல் இ.கே.500/501 விமான சேவை 2 அடுக்கு வசதி கொண்டது ஆகும்.

    முதல் மற்றும் வர்த்தக வகுப்பில் பயணம் செய்யும் பயணிகள் சென்னை, மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு செல்லும் போது விமான நிலையத்தில் இருந்து தங்களின் இருப்பிடங்களுக்கு செல்ல சொகுசு கார் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    எமிரேட்ஸ் ஸ்கைவர்டு உறுப்பினர்கள் துபாய் உள்ளிட்ட விமான நிலையங்களில் சொகுசு ஓய்விடங்களை பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Esakki Raja
    First published:

    அடுத்த செய்தி