Home » News » International » EMERGENCY DECLARED IN WASHINGTON TILL JANUARY 24 SKD

ஜோ பைடன் உயிருக்கு ஆபத்து? - ஜனவரி 24-ம் தேதி வரை வாஷிங்டனில் அவசரநிலை பிறப்பிப்பு

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் ஜனவரி 24-ஆம் தேதி வரை அவசரநிலை அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஜோ பைடன் உயிருக்கு ஆபத்து? - ஜனவரி 24-ம் தேதி வரை வாஷிங்டனில் அவசரநிலை பிறப்பிப்பு
வெள்ளை மாளிகை
  • Share this:
அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் அமோக வெற்றி பெற்றார். இதனை தொடர்ந்து அமெரிக்காவின் 59-வது அதிபராக ஜோ பைடன் வரும் 20-ஆம் தேதி பதவியேற்கவுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ சான்று வழங்கும் நிகழ்ச்சி அந்நாட்டின் நாடாளுமன்ற கட்டிடத்தில் கடந்த 6-ஆம் தேதி நடைபெற்றது. அப்போது, தற்போதைய அதிபர் டிரம்பின் ஆதரவாளர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வன்முறையில் ஈடுபட்டதோடு, நாடாளுமன்றத்திற்குள் புகுந்து பொருட்களை சூறையாடினர். இந்த நிகழ்வை தொடர்ந்து ஜோ பைடனின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உளவுத்துறை தெரிவித்ததை அடுத்து வாஷிங்டனில் அவசநிலையை டிரம்ப் பிரகடனம் செய்துள்ளார்.

பைடன் பதவியேற்பு விழாவின் போது டிரம்ப் ஆதரவாளர்கள் ஆயுதங்களுடன் போராட்டம் நடத்தவுள்ளதாக வெளியான தகவலை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

முன்னதாக நாடாளுமன்ற தாக்குதலுக்கு பொறுப்பேற்று டிரம்ப் தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்தி பிரதிநிதிகள் சபையில் துணை அதிபர் மைக் பென்ஸ் பதவி நீக்கத் தீர்மானத்தை அறிமுகம் செய்துள்ளார்.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
First published: January 12, 2021
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading