ஹோம் /நியூஸ் /உலகம் /

''வயசாகிடுச்சுனு வெளியேபோக சொல்றாங்க'' - எலான் மஸ்க் மீது பரபர குற்றச்சாட்டை பதிவு செய்த எஞ்சினியர்!

''வயசாகிடுச்சுனு வெளியேபோக சொல்றாங்க'' - எலான் மஸ்க் மீது பரபர குற்றச்சாட்டை பதிவு செய்த எஞ்சினியர்!

spacex

spacex

2018 ஆம் ஆண்டில் 58வது வயதில் SpaceX ஆல் பணியமர்த்தப்பட்ட ஜான்சன் புவிக்கு செயற்கைக்கோள் படங்களைப் பெறுவதற்கும் அனுப்புவதற்கும் பயன்படுத்தப்படும் ஒளியியல் பொறியியல் எனப்படும் ஒரு முக்கிய துறையில் ஆழ்ந்த நிபுணத்துவம் பெற்றவர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai |

எலான் மஸ்க் இப்போது தினசரி நாளிதழில் வரும் கட்டாய செய்தியாகவே மாறி வருகிறார். 62 வயதான முதன்மை பொறியாளர் ஒருவர், எலோன் மஸ்க்கின் விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ், அவர் இறந்துவிடுவார் அல்லது ஓய்வு பெறுவார் என்ற அச்சத்தில் அவரை ஓரங்கட்டியதாக குற்றம் சாட்டியுள்ளார்.

ஜான் ஜான்சன், தனது ஒரு வலைப்பதிவில் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்திற்கான தனது பயணத்தை விவரித்தார். செயல்திறன் இலக்குகளை அடைந்து, தனது சக ஊழியர்களை விட அதிக நேரம் வேலை செய்த போதிலும், அவரது பணிப் படிப்படியாக இளம் பொறியாளர்களுக்கு மாற்றப்பட்டன என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மஸ்க் தலைமையிலான ராக்கெட் நிறுவனத்தில் வயது பாகுபாட்டால் பாதிக்கப்பட்டதாக வாஷிங்டன் மாநில மனித உரிமை ஆணையத்திலும் புகார் அளித்துள்ளார்.

2018 ஆம் ஆண்டில் 58வது வயதில் SpaceX ஆல் பணியமர்த்தப்பட்ட ஜான்சன் புவிக்கு செயற்கைக்கோள் படங்களைப் பெறுவதற்கும் அனுப்புவதற்கும் பயன்படுத்தப்படும் ஒளியியல் பொறியியல் எனப்படும் ஒரு முக்கிய துறையில் ஆழ்ந்த நிபுணத்துவம் பெற்றவர்.அதற்காக தான் அவர் அந்த நிறுவனத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க: 6 மாதங்களில் மனித மூளையில் சிப் பொருத்தும் பணிகளை தொடங்க எலான் மஸ்க் திட்டம்

ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் இப்போது ட்விட்டரில், மஸ்க் தனது ஊழியர்கள் கடின உழைப்பாளியாக இருக்க வேண்டும் என்று பார்க்கிறார். வயதான தொழிலாளர்கள் குறைந்த செயல் திறன் கொண்டவர்கள். கடின உழைப்பைச் செய்ய முடியாதவர்கள் என்ற ஒரு கருத்து நிலவி வருகிறது. அதற்கு சவால் விடும் விதத்தில் எனது பணி இருந்தது.

எனது நீண்ட நேரத்தை அந்த நிறுவனத்தில் பணி செய்து தான் செலவழித்தேன். பகல், இரவு என்று பார்க்காமல் வார இறுதிகளில் கூட வேலை செய்தேன். தினமும் கிட்டத்தட்ட 10-12 மணிநேரம்

வேளையில் செலவிட்டேன். என்னை விட அதிக மணிநேரம் வேலை செய்தவர்கள் யாரும் இல்லை. கொரோனா சமயத்தில் கூட பொறியாளர்கள் தொலைதூரத்தில் பணிபுரிந்தபோது நான் அலுவலகம் சென்று பணியாற்றினேன் என்று தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 2020 இல் அறுவை சிகிச்சைக்கு சென்றபோதுதான், அவரது பணிகளை குறைந்த அனுபவம் மற்றும் நிபுணத்துவம் கொண்ட மற்ற இளைய ஊழியர்களுக்கு மாற்றத் தொடங்கியுள்ளனர். அதன் பின்னர் அவர் நிறுவனத்தில் எதிர்கொள்ளும் வயது பாகுபாடு குறித்து HR-க்கு புகார் செய்தார். "தவறான புரிதலில்" நடந்தவை என்று அவர்கள் விளக்கம் தந்து, எனது தொழில்நுட்ப வேலைகளை விடுத்து , உள்வேலைகளை பார்க்கும்படி கூறினர்.

தொழில்நுட்பப் பகுதியில் இனி வேலை இல்லை என்றும், ஆனால் அவரது முதலாளி அவருக்கு சில புதிய வேலைகளைக் கொடுக்க இருப்பதாக கூறியுள்ளனர். புதிய பணி பலனளிக்காததால், அவர் ஜூன் 2022 இல் நிறுவனத்தை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. நிபுணத்துவத்திற்கும் திறனுக்கும் மதிப்பு அளிக்காமல் வயதை காரணம் காட்டி வேலையை விட்டு அகற்றுவது தவறு என்று குற்றம் சாட்டியுள்ளார்.

First published:

Tags: Elon Musk, Space