ஹோம் /நியூஸ் /உலகம் /

''ட்விட்டர் சிஇஓ... விரைவில் பதவி விலகுவேன்'' - அதிரடியாக அறிவித்த எலான் மஸ்க்!

''ட்விட்டர் சிஇஓ... விரைவில் பதவி விலகுவேன்'' - அதிரடியாக அறிவித்த எலான் மஸ்க்!

எலான்

எலான்

எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை பதவியில் இருந்து விரைவில் விலகுவேன் என தெரிவித்துள்ளார்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மிக விரைவில் நான் ட்விட்டர் சிஇஓவில் இருந்து பதவி விலகுவேன் என எலான் மஸ்க் அதிரடியாக தெரிவித்துள்ளார்

ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியதில் இருந்தே பல்வேறு சிக்கல்கள் நீடித்து வருகின்றன. அதன் உச்சகட்டமாக தற்போது எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை பதவியில் இருந்து விரைவில் விலகுவேன் என தெரிவித்துள்ளார்

உலகின் சில முக்கியமான செய்தியாளர்களின் கணக்குகளை கடந்த வியாழக்கிழமை முடக்கினார் எலான் மஸ்க். அதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் அண்டோணியோ குட்டரஸ் வரை அதிருப்தி தெரிவித்ததை தொடர்ந்து அந்த நடவடிக்கையை கைவிட்டார் எலான் மஸ்க்.

அந்த சூடு தணிவதற்குள் கொள்கை மாற்றம் செய்கிறேன் என்ற பெயரில் அடுத்த சிக்கலில் சிக்கி தவித்து வருகிறார் எலான் மஸ்க்.மற்ற சமூக வலைதளங்களின் பதிவுகளை ட்விட்டர் தளத்தில் விளம்பரப்படுத்தும் நோக்கில் மறு பதிவு செய்வதற்கு எலான் மஸ்க் கடும் எதிர்ப்பு தெரிவித்து, அதுபோன்று மீள் பதிவிடும் ட்விட்டர் கணக்குகளை முடக்கப் போவதாக ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

அதோடு, தான் தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்து விலக வேண்டுமா எனக் கேட்டு பயனர்களை கருத்துக் கூறுமாறு கேட்டிருந்தார். மேலும் பயனர்களின் முடிவிற்கு தான் கட்டுப்படுவதாகவும் கூறியிருந்தார் எலான் மஸ்க். அதன்படி ட்விட்டர் பயனர்களும் தங்கள் கருத்துக்களை வாக்குகளாக அளித்துள்ளனர். உலகம் முழுவதும் 35 கோடி பயனர்களை ட்விட்டர் கொண்டுள்ள நிலையில் எலான் மஸ்க்கின் கேள்விக்கு சுமார் ஒரு கோடியே 75 லட்சம் பேர் வாக்களித்துள்ளனர்.

அதில் 57 விழுக்காடு பேர் எலான் மஸ்க் பதவி விலக வேண்டும் என வாக்களித்துள்ளனர். 43 விழுக்காடு பேர் வேண்டாம் என பதில் அளித்துள்ளனர். பயனர்களின் கருத்துக்கு தாம் மதிப்பளிப்பதாக எலான் மஸ்க் ஏற்கனவே பதிவிட்டிருந்தார். அதன்படி இன்று ட்வீட் செய்துள்ள எலான் மஸ்க், மிக விரைவில் நான் ட்விட்டர் சிஇஓவில் இருந்து பதவி விலகுவேன் என எலான் மஸ்க் அதிரடியாக அறிவித்துள்ளார். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், இன்னொரு ஆள் சிஇஓவாக கிடைத்தவுடன் நான் பதவி விலகுவேன்.  குறிப்பிட்டுள்ளார்

First published:

Tags: Elon Musk, Twitter