ஹோம் /நியூஸ் /உலகம் /

உக்ரைன் போரை தீர்த்துவைக்க எலான் மஸ்க் போட்ட ட்வீட்.. ஆத்திரத்தில் உக்ரைன் மக்கள்!

உக்ரைன் போரை தீர்த்துவைக்க எலான் மஸ்க் போட்ட ட்வீட்.. ஆத்திரத்தில் உக்ரைன் மக்கள்!

உக்ரைன் போருக்கு யோசனை சொன்ன எலான் மஸ்க்

உக்ரைன் போருக்கு யோசனை சொன்ன எலான் மஸ்க்

பிரபல தொழிலதிபர் எலான் மஸக் ரஷ்யா - உக்ரைன் போருக்கு ஆலோசனை கூறி ட்விட்டரில் வாக்கெடுப்பு நடத்தி உக்ரைன் அதிபர் செலன்ஸ்கியின் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • inter, IndiaKyivKyiv

  ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் பிப்ரவரி 24ஆம் தேதி உக்ரைன் நாட்டின் மீது போர் அறிவித்து ராணுவ நடவடிக்கை மேற்கொண்டார். எட்டு மாதங்கள் ஆகியும் உக்ரைன் மீதான ரஷ்யாவின் இந்த திடீர் படையெடுப்பு ஓய்ந்தபாடில்லை. இரு நாடுகளின் போரானது அந்த பிராந்தியத்தை மட்டுமல்லாது உலக நாடுகள் அனைத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

  ஆரம்பத்தில் ரஷ்யா வெகு வேகமாக முன்னேறி உக்ரைனின் முன்னணி நகரங்களை கைப்பற்றியது. இருப்பினும் உக்ரைன் சரணடையாமல் ரஷ்ய படைகளை எதிர்த்து போராடி ரஷ்யாவுக்கு ஆச்சரியம் தந்தது. உக்ரைனுக்கு ஆதரவாக ஐரோப்பிய அமெரிக்க கூட்டமைப்பான நேட்டோ நாடுகள் பொருளாதார ஆயுத உதவிகளை வழங்கி வந்தன.

  மேலும், போரில் முக்கிய நகர்வாக ரஷ்யா கட்டுப்பாட்டில் இருந்து உக்ரைனின் நகரப்பகுதிகளை உக்ரைன் நாட்டு படையினர் மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளனர். இதைத் தொடர்ந்து ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் உக்ரைன் மற்றும் நேட்டோ நாடுகளை அச்சுறுத்தும் விதமாக அணு ஆயுதத்தை பயன்படுத்துவோம் என அதிரடியாக அறிவித்தார்.மேலும், உக்ரைனின் 4 பிராந்தியங்களை ரஷ்யாவுடன் இணைத்து அவர் உத்தரவிட்டார்.

  இதனால் இந்த போர் இல்லாமல் மேலும் சிக்கலை நோக்கி சென்றுவருகின்றன. புதினின் அணு ஆயுத மிரட்டல் உலக நாடுகளின் அமைதியை அச்சுறுத்தும் விதமாக உள்ள நிலையில், போரை நிறுத்தி அமைதியை நிலைநாட்ட உலகின் முன்னணி தொழிலதிபரும் ஸ்பேஸ் எக்ஸ் சிஇஓவுமான எலான் மஸ்க் ட்விட்டரில் ஆலோசனை வழங்கியுள்ளார். இந்த ஆலோசனை உக்ரைன் நாட்டு மக்கள் அந்நாட்டு அதிபர் செலன்ஸ்கி ஆகியோரிடம் கொதிப்பை உருவாக்கியுள்ளது.

  இந்த போரில் அமைதியை ஏற்படுத்தி ரஷ்யா தன்னுடன் இணைத்துக் கொண்ட 4 பிராந்தியங்களில் ஐநா சபை கண்காணிப்புடன் வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.அதன் முடிவுகளின் படி போரில் இரு தரப்பும் அமைதியை ஏற்க வேண்டும் என்றுள்ளார். அத்தோடு நிற்காமல், க்ரைமியா மற்றும் டான்பாஸ் பிராந்திய மக்கள் தாங்கள் ரஷ்யா அல்லது உக்ரைன் ஆகிய இரு நாடுகளில் எந்த நாட்டுடன் இருக்க விரும்புகிறார்கள் என வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ட்விட்டரில் வாக்கெடுப்பு நடத்தியுள்ளார்.

  இதற்கு உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி கோபத்துடன் உங்களுக்கு எந்த எலான் மஸ்கை பிடிக்கும். ரஷ்யா ஆதரவு எலான் மஸ்கா அல்லது உக்ரைன் ஆதரவு எலான் மஸ்கா என ட்விட்டரில் போட்டி வாக்கெடுப்பு நடத்தியுள்ளார். அதேபோல் எலான் மஸ்கின் கருத்து போரில் உக்ரைன் மக்கள் கொண்டுள்ள உறுதித்தன்மை மற்றும் தியாகத்தை கொச்சைப்டுத்துவதாக உள்ளது என பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

  இதையும் படிங்க: 5 மனைவிகள், 11 பிள்ளைகள், 40 பேரப்பிள்ளைகள்.. குடும்பத்தில் 62 பேருடன் மகிழ்ச்சியாக வாழும் நபர்

  தன் மீது தொடர் விமர்சனம் வந்த நிலையில், அதற்கு பதிலளித்த எலான் மஸ்க், பெரும் போர் என்று சொன்னால் உக்ரைன் வெற்றி பெறும் வாய்ப்புகள் மிகக் குறைவு. ஏன் என்றால், உக்ரைனை விட 3 மடங்கு அதிக மக்கள்தொகை கொண்ட நாடு.அப்படி இருக்க அணு ஆயுத அபாயம், போர் இழப்புகள் இரு நாடுகளுக்கு பாதிப்பை தருவதுடன் ஒட்டுமொத்த உலகிற்குமே தீங்கு தரும். எனவே, அமைதி தான் சிறந்த வழி என்றுள்ளார்.மேலும், போர் பாதிப்புக்கு ஆளான உக்ரைனுக்கு தனது ஸ்பேஸ் எக்ஸ் ஸ்டார்லிங்க் மூலம் இணைய தகவல் தொடர்பு உதவியை தந்ததையும் எலான் மஸ்க் சுட்டிக்காட்டியுள்ளார். உணர்வுபூர்வமான இந்த போர் விவகாரத்தில் தொழிலதிபர் எலான் மஸ்க் கூறிய கருத்து உக்ரைன் மக்களுக்கும் அந்த மக்களுக்கு ஆதரவு தரப்பினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  Published by:Kannan V
  First published:

  Tags: Elon Musk, Russia - Ukraine, Twitter, Vladimir Putin